உள்ளூர் செய்திகள்

நோய்கள் ஜாக்கிரதை - மின்னும் மின்மினி செர்ரி

ஆபிஸ் மேனேஜரின் திருமண வரவேற்பு! விழா கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிஸ்தா கேக்கின் மேல் சிவப்பு ரத்தினங்களாய் மின்னியபடி செர்ரி பழங்கள். கேக் வெட்டப்பட்டது. குழுமியிருந்த குழந்தைகள் முகத்தில் அப்படி ஒரு பரவசம்! கேக் கைக்கு வந்ததும், முதலில் செர்ரிப்பழத்தை எடுத்து ருசித்தனர் குழந்தைகள். அவர்கள் மட்டுமல்ல... அங்கிருந்த பெரியவர்களும்கூட செர்ரிப் பழத்தைதான் முதலில் சுவைத்தனர்.உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாம் ஆசை ஆசையாக விரும்பிச் சாப்பிடும் அந்தப்பழம் செர்ரிப்பழமே அல்ல! அதிர்ச்சியாக இருக்கிறதா? கள்ளிக்காட்டில் வளரும் சாதாரண காட்டுக்களாக்காய்தான் செர்ரிப்பழமாக உருமாறி வருகிறது. சரி... பச்சை நிறத்தில் இருக்கும் அந்த களாக்காய் எப்படி இரத்தச் சிவப்பில் மாறுகிறது? அங்கேதான் இருக்கிறது வியாபாரத் தந்திரம்!பச்சைநிற காட்டுக்களாக்காயை சிவப்பு நிறத்தில் மாற்ற, நைட்ரிக் அமிலத்தில் ஊறவைத்து சிவப்பு நிற நிறமியும், சாக்ரீமும் சேர்க்கின்றனர். பொதுவாக, எல்லா பழங்களும் ஒரு வாரத்திற்கு மேல் இருந்தால் கெட்டு விடும். ஆனால், இந்த நிறம் மாற்றப்பட்ட களாக்காய் மட்டும் ஒருமாதம் ஆனாலும் கெடாது. இதற்கு காரணம் ரசாயனம்!இந்த ரசாயனம் உடலுக்கு பல கெடுதல்களை விளைவிக்கும். இதை தொடர்ந்து சாப்பிடும்போது, புற்றுநோய் வரக்கூடிய அபாயமும் உண்டு.பெரும்பாலும், செர்ரி பாக்கெட்டுகளில் 'கராண்டா' என்றுதான் அச்சடிக்கப்பட்டிருக்கும். 'கராண்டா' என்றால் 'களாக்காய்' என்று அர்த்தம். இது முதல் சாட்சி! இரண்டாவது, நீர்ச்சத்தோடு இருக்க வேண்டிய செர்ரி பழம், எண்ணெய் தன்மையோடு இருக்கும். இது இரண்டாவது சாட்சி. இந்த விழிப்புணர்வோடு செர்ரியை அணுகினாலே போதும், நோய்களை அண்டவிடாமல் விரட்டி விடலாம்! - முருகன், நுகர்வோர் வழக்கறிஞர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !