உள்ளூர் செய்திகள்

கிளிப் அணிந்தால் வலிக்குமா

பல் கிளிப் அணிந்தால் வலி வருமா? எனக்கு மேல் பற்களில் மூன்று, கீழ்த்தாடையில் 5 பற்கள் இல்லை. கழற்றி மாட்டும் பல்செட் மாட்டியுள்ளேன். அதிலுள்ள கம்பிகள் ஈறுகளை அழுத்துகின்றன. பல்செட்டும் கனமாக உள்ளதால், அசவுகரியமாக உள்ளது. வேறு பல்செட் உள்ளதா? கழற்றி மாட்டும் பல்செட்டுகளில் மிருதுவானவை உள்ளன. பல்செட்டை இரவில் கழற்றி, தண்ணீரில் போட்டு வைத்து காலையில் சுத்தம் செய்து அணிவது நலம். இதனால் வாயில் உள்ள ஈறுகள் மற்றும் தசைகள் தொடர்ந்து பல்செட்டினால் அழுத்தப்படுவதை தவிர்க்கலாம். என் மகனுக்கு முன்பற்கள் தூக்கப்பட்டுள்ளன. கிளிப் அணிந்தால் வலி இருக்கும். எந்த உணவையும் சாப்பிட முடியாது என்று பயப்படுகிறான். இது உண்மையா? இல்லை. கிளிப் அணியும் முறையில் பற்களின் வெளிப்பகுதியில் சிறிய 'பிராக்கெட்' பொருத்தப்படும். இதில் கம்பி இணைக்கப்படும். இக்கம்பியின் மூலம் தேவையான அழுத்தம் அளிக்கப்பட்டு, அதன்மூலம் பற்கள் நகர்ந்து பல்வரிசை சீராகும். மிகக் கடினமான உணவுகள், அதாவது உலர்ந்த பருப்புகள் அல்லது பிசுபிசுப்பான சாக்லெட் வகைகள் சாப்பிடும்போது பற்களின் வெளிப்பகுதியில் பொருத்தப்படும் பிராக்கெட் கழன்று விடலாம். கிளிப் அணியும்போது அதற்கான பிரஷ் மற்றும் மவுத்வாஷ் உபயோகித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். பற்சொத்தை ஏற்பட்டுள்ளதை ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்க முடியாதா? கடைவாய் பற்களின் மேல்பகுதி, இரு பற்களின் நடுவே ஆகிய இடங்களில்தான் பற்சொத்தை அதிகம் உருவாகிறது. நாம் பல் துலக்கும்போது, பிரவுன் அல்லது கருப்பு நிற திட்டுக்கள் உள்ளதா என பார்க்க வேண்டும். மேலும் இருபற்களின் நடுவே உணவு அடிக்கடி சிக்குகிறதா என்று கவனிக்க வேண்டும். சில நிறமாற்றங்கள் நாம் உண்ணும் உணவால் ஏற்படும் கறைகள். இவை பற்களை சுத்தம் செய்தால் போய்விடும். சிறிதளவே பற்சொத்தை இருந்தால் சில குறிப்பிட்ட பேஸ்டுகள் மூலம் சரிசெய்யலாம்.

- டாக்டர் எஸ்.முத்துராமன்மதுரை, 94430-61160


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !