உள்ளூர் செய்திகள்

ருசிக்க மறந்த உணவுகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும், சத்தான உணவுகள் மிகவும் அவசியம். குழந்தை பிறந்து, ஒரு வயதுக்கு பின், திட உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுக்க துவங்கும்போதே, அவை, சத்தான உணவாகவும், அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான உணவாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில், சாமை இட்லி, சத்தான உணவு தான்! சந்தேகமேயில்லை.தேவையானவைசாமை ¼ கிலோஉளுத்தம் பருப்பு 100 கிராம்வெந்தயம் 1 தேக்கரண்டிஉப்பு தேவைக்கேற்பசெய்முறை:அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை கழுவி தனித்தனியாக ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின், இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து, ௮ மணிநேரம் புளிக்கவிட வேண்டும். பின், இட்லி குக்கரில், இட்லிகளாக ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுத்து, அதனோடு இஞ்சி சேர்த்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.பயன்கள்:சாமை உணவு, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. அரிசியை தொடர்ந்து பயன்படுத்துவதை குறைத்து சாமையை, அதற்கு மாற்றாக பயன்படுத்தினால் நல்லது. காரணம், அதில் கார்போஹைட்ரேட் குறைவு. சாமையில் தைமன், தைபோபிலிமின், போலிக் அமிலம் மற்றும் மெக்னீஷியம் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட, சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.- லீலாவதி சீனிவாசன், சமையற்கலை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்