ஆரோக்கியம் உணவில் தான் துவங்குகிறது
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் வாயிலாகத் தான், இதய நோய் அதிகமாக ஏற்படுகிறது. 30 சதவீத இதய நோய்க்கு தவறான உணவுகளும், பழக்க வழக்கங்களும் தான் காரணமாய் உள்ளன.உடல் உபயோகத்திற்கென, மூன்று விதமான முக்கிய எரிபொருள்கள் இருக்கின்றன. இவை, கார்போஹைட்ரேட், புரதங்கள், கொழுப்புகள். அரிசி, கோதுமை போன்ற சில உணவுப் பொருட்களில், கார்போஹைட்ரேட்டும், மாமிசம், பருப்புகள் போன்றவற்றில் அதிக புரதங்களும், வெண்ணெய், எண்ணெய் போன்றவற்றில் கொழுப்புகளும் அதிகமாக இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும், உடலுக்கு தேவையான எரிபொருளாக மாறுகிறது.இம்மூன்று பொருட்களையும், முறையாக சமப்படுத்தி எடுத்துக் கொண்டால், உடலின் பணிகள் தொய்வின்றி நடைபெறும். எனவே, நூறாண்டு வாழக்கூடிய இவ்வுடலை, பேணிகாக்க, சமநிலையான எரிபொருள்கள் பயன்படுத்துவது அவசியம்.உணவு பழக்கவழக்கங்கள்உணவில், அதிகம் எண்ணெய் சேர்ப்பதை குறைக்க வேண்டும். எண்ணெய் இல்லா உணவுகள் சமைத்து உண்பது, மிகவும் சிறந்தது. நமக்கு தேவையான 10 சதவீத கொழுப்பு சக்தி கூட அரிசி, கோதுமை, பருப்பு, தானியங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.இதய நோய் உள்ளவர்கள், இதய நோயிலிருந்து மீள, உணவில் எண்ணெய் சேர்ப்பதை தவிர்க்கவும்.சைவ உணவிற்கு பழகிக் கொள்ளுங்கள். மீனும், கோழி இறைச்சியும் ஏற்புடையது என்றாலும், அதை சமைக்க அதிகபட்ச மசாலா, எண்ணெய் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, தாவர உணவுகளையே உண்ணுங்கள். முட்டையின் வெள்ளை கரு மட்டும் உண்ண தகுதியானது.முளைகட்டிய பயறு வகைகளில் குளேரோபில், வைட்டமின் ஏ, சி, டி, இ, கே மற்றும் பி - காம்ப்ளக்ஸ் மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன. எனவே முளைகட்டிய தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.பூசணிக்காய், பீட்டாகரோட்டின், கால்சியம், இரும்பு, வைட்டமின் பி, நிறைந்த சிறந்த காய்கறி. இதை உணவில் சேர்த்தக் கொள்ளவம்.வெள்ளைப் பூண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கரோனரி ரத்தக் குழாய்களில் ரத்தம் கட்டி சேராமல் தடுப்பதுடன், இதய தாக்குதல், நீரிழிவு, மன உளைச்சலை தடைசெய்கிறது.காளான்கள் பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு ஆகிய நிறைந்த பூஞ்சைகள். இவை ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. நாம் உண்ணும்போது உணவை ரசித்து, நன்றாக மென்று விழுங்கவும். அவசரமாய் உண்பதை தவிர்ப்போம்.அன்றாட உணவில், கார்போஹைட்ரேட் 70 சதவீதமும், புரோட்டின் 20 சதவீதமும், கொழுப்பு 10 சதவீதமும் என்ற உணவை உண்போம்.இதய நோய் தடுப்பதில், உணவின் பங்கு மிக முக்கியமானது. எனவே, இதய நோய் வராமல் தடுக்கக்கூடிய உணவு முறைக்கு மாறுவோம்.