நாங்க இப்படிதானுங்க!: இளமையின் ரகசியம் இசை அல்ல!
'கர்நாடக இசை கச்சேரிகளின் போது, என்னை நானே மறந்து போகும் தருணங்கள் உண்டு. இசையோடு கலந்து விடும் தருணங்களில், வேறு எதுவும் நினைவில் இருக்காது. அது போன்ற சமயங்களில், மனதின் அடி ஆழத்தில், தீவிர, 'ஸ்ட்ரெஸ்' இருக்கும். ஏனெனில், தொடர்ச்சியாக விட்ட இடத்தை நினைவு வைத்து பாடியாக வேண்டும்; அந்த, 'டென்ஷன்' உடலையும் பாதிக்கும். அதனால், மனதிற்கும், உடம்பிற்கும், 'ரிலாக்சேஷன்' தேவைப்படும். அதை எனக்கு தருவது, ஒர்க் - அவுட்.விபரம் தெரிந்த வயதில், 'பிட்னெஸ்' மீது ஆர்வம் வந்தது. அன்றிலிருந்து, இசையைப் போலவே, ஒர்க் - அவுட்டும் என்னோடு கலந்து, பிரிக்க முடியாததாகி விட்டது. தற்போதும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மெம்பர் நான். கிரிக்கெட் தவிர, டென்னிஸ், பேட்மின்டன் விளையாடு வேன்; விளையாடும் போது, சில சமயங்களில் காயங்கள், தசைப்பிடிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதனால், ரன்னிங், ஜிம் ஒர்க் - அவுட் தவறாமல் செய்வேன். இது, தசைகளை வலிமையாக்கி, விளையாட்டின் போது ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாக்கும். மற்றபடி, 'டயட்' ரெகுலரானது தான். குறைந்தது, மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவேன். காலையில் முதல் உணவு, பழங்கள் தான். பெரும்பாலும், ஆப்பிள் அல்லது பப்பாளி சாப்பிடு வேன். பி.உன்னி கிருஷ்ணன், பின்னணி பாடகர்.