நாங்க இப்படிதானுங்க!: தேங்காய் எண்ணெய் ரகசியம்!
மரபியல் ரீதியாக, மார்பக, கர்ப்பப்பை கேன்சர் வருவதற்கான சாத்தியங்கள் இருப்பது உறுதியானவுடன், இரண்டு மார்பகங்கள், கர்ப்பப்பை, கருக்குழாயை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டார். 'கேன்சரால் என் அம்மா இறந்த போது, நிலை குலைந்து போனேன்; என் குழந்தைகளுக்கு அந்த நிலையைத் தர விரும்பவில்லை' எனச் சொல்லும் ஜோலியின் டயட்டில் முக்கியமாக இடம் பெறுவது, தினை, சோளம் உட்பட அனைத்து சிறுதானியங்கள், தோல் நீக்காத கோதுமை, பருப்பு வகைகள் ஆகியவை தான்.மேலும், முழு பழங்கள், வேக வைத்த காய்கறிகள், சோயா பால், ஸ்நாக்ஸ் சாப்பிடத் தோன்றினால், உலர்ந்த நட்ஸ், வெள்ளரி, சூரியகாந்தி விதை போன்றவற்றை, கைப்பிடி அளவு சாப்பிடுகிறார். மூன்று வேளை சாப்பிடாமல், சிறிய அளவில், அவ்வப்போது சாப்பிடுவது ஜோலியின் பழக்கம்.ஜோலியிடம் பொறாமைப்பட வைக்கும் விஷயம், அவரின் தோலின் பளபளப்பு. 'எனக்கு இந்த வரத்தை தருவது தேங்காய் எண்ணெய்' என்கிறார். - ஏஞ்சலினா ஜோலி, ஹாலிவுட் நடிகை