குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! பிரெண்டு ரிக்வஸ்ட் ஏற்றுக் கொள்ளும் முன் கவனிக்க...
ஐரோப்பாவில் உள்ள ரெஸ்டாரன்ட்டுகளில் செய்த ஆய்வில், அந்த நேர பசிக்காக என, சாப்பிட வருபவர்கள் கூட, மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து, திட்டமிட்டதை காட்டிலும் அதிகம் சாப்பிடுகின்றனர் என, தெரிய வந்திருக்கிறது. காரணம், ரெஸ்டாரன்ட்டில், நீங்கள் ஓர் உணவை, 'ஆர்டர்' செய்து காத்திருக்கும் நேரத்தில், சுற்றி இருப்பவர்கள் சாப்பிடுவதை பார்த்தால், அடுத்தடுத்த வகைகளை, 'ஆர்டர்' செய்ய வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்த முடிவதில்லை. இதற்கு பெயர், 'பிஹேவியர் ஜெர்ம்ஸ்' அதாவது, கிருமிகள் பரவும் வேகத்தை போல, சாப்பிடும் ஆசை வந்து விடும். இது, 'பேஸ்புக்'கிற்கும் பொருந்தும் என்கின்றனர். 'பேஸ்புக்' நண்பி, குண்டாக இருந்தால், நீங்களும், குண்டு ஆவதற்கான வாய்ப்பு, மூன்று மடங்கு அதிகம். உங்களுக்கு நேரடியாக தெரியாது என்றாலும், 'இமிடேட்' செய்யும் மனித இயல்பு, நம்மையும் அறியாமல், நம்மை உடல் பருமன் உடையவர்களாக செய்து விடும்.