உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: கொழுப்பை நீக்கும் நவதானியம்

உடல் பருமன், ஆயுர்வேதத்தில் நோயாக கருதப்படுகிறது. இதற்கு, 'ஸ்தவ்ல்யம்' என பெயர். இந்த நோயால், கொழுப்பு எனும் தாது வளரும் அளவுக்கு, மற்ற தாதுக்கள் வளர்ச்சி அடைவதில்லை. தாதுக்களின் சமநிலை பாதிக்கப்படுவதால், பலம் குறைகிறது; பசியும், தாகமும் தொடரும். இவர்களுக்கு, வெகு விரைவில் உணவு செரித்து விடுவதால், மீண்டும் மீண்டும் உண்கின்றனர். இந்த நோயால் அவதிப்படும் பெண்களுக்கு, கபத்தையும், கொழுப்பையும் நீக்கும் உணவுகளை தர வேண்டும். காராமணி, நவதானியம், கம்பு, கேழ்வரகு, பயறு போன்ற தானியங்களை சேர்க்க வேண்டும். தேன் கலந்த நீர், அரிஷ்டம், தெளிந்த மோர் மற்றும் சில வகை ஆயுர்வேத மருந்துகள் சாப்பிடுவதும் அவசியம். பசி எடுக்கும் வேளையில், தகுந்த அளவில் உணவு உட்கொண்டால், உடல் பருமன் ஏற்படாது. பகல் உறக்கம் தவிர்ப்பது மற்றும் தினமும் உடற்பயிற்சி, உடல் பருமனைத் தடுக்கும்!டாக்டர் பி.எல்.டி.கிரிஜா,ஆயுர்வேத சிறப்பு மருத்துவர், சென்னை.sanjeevanifoundation@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்