உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: அதிக சூடும் ஆபத்தில்லை!

நல்ல கொழுப்பு, ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவும். தேங்காய் எண்ணெய், நெய் இரண்டிலும் நல்ல கொழுப்பு உள்ளது. பல நுாற்றாண்டுகளாக இவை பயன்பாட்டில் இருந்தாலும், மிக குறைவாகவே இவற்றை நாம் உபயோகிக்கிறோம். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலம், எளிதில் செரிமானம் ஆகக் கூடியது; அதிகமான சூட்டில் சமைத்தாலும், எந்த பிரச்னையும் தராது.ஜீரண மண்டலத்தில் உள்ள செல்களுக்கு, எரிசக்தியாகவும் இவை பயன்படும். எனவே, ஜீரண மண்டலத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், இந்த செல்களை பயன்படுத்தி, 'மியூக்கஸ்' எனப்படும் பாதுகாப்பு அடுக்கை, உணவுக் குழாயின் உட்புறம் உருவாக்குகிறது; இது, கெட்ட பாக்டீரியாவிடம் இருந்து, உணவுக் குழாயை பாதுகாக்கும்.வைட்டமின் ஏ, ஈ, மற்றும் ஒமேகா 3க்கு இணையான சத்துகளும் உள்ளன. செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இரண்டையும் அளவோடு பயன்படுத்தலாம்.ஹேமலதா ரத்னம், ஹோலிஸ்டிக் நியூட்ரிஷனிஸ்ட், கனடா.info@melliyal.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்