உள்ளூர் செய்திகள்

தண்ணீரிலும் பிளாஸ்டிக் துகள்கள்!

மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதியான நிலையில், ஒரு தண்ணீர் பாட்டிலில், ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதையும் உறுதி செய்துள்ளோம். 11 முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த, 250 தண்ணீர் பாட்டில்களை ஆய்வு செய்ததில், அவற்றில் பிளாஸ்டிக் துகள்களுடன் சேர்த்து, 'பாலி புரோபைலின், நைலான், பாலி எத்திலின்' கலந்து இருக்கிறது.நியூயார்க்கில் உள்ள முன்னணி ஆய்வுக் கூடத்தில் இந்த ஆய்வை மேற்கொண்டோம். நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களைத் தவிர, அவற்றைப் போலவே இருக்கும் வேறு துகள்களும் இருந்தன. உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சிலவற்றில், 1 லிட்டரில், 10 ஆயிரம் நுண்ணிய துகள்கள் இருந்தன. 93 சதவீதம் பாட்டில்களில் இது போன்ற பிளாஸ்டிக் மற்றும் பிற துகள்கள் இருந்தன. காலரா, வயிற்றுப் போக்கு உட்பட பல்வேறு தொற்று நோய்கள் தண்ணீர் மூலமே பரவுகிறது என்பதால், வெளியிடங்களுக்கு செல்லும் போது, வாட்டர் பாட்டில்கள் பாதுகாப்பு என்று வாங்குகிறோம்.கடல், குளம், ஏரி, மண், காற்று என்று அனைத்திலும், 5 மில்லி மைக்ரான் அளவுக்கு பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கின்றன. இந்த துகள்கள் கடைசியாக வந்து சேர்வது நம் உடல்.- ஆர்ப் மீடியா, வாஷிங்டன், அமெரிக்கா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்