திரிகோணாசனம்
செய்முறை:1 முதலில், நேராக இரண்டு கால்களையும் சேர்த்து நிற்க வேண்டும்.2 பின், இரண்டு கால்களையும் தள்ளி மூன்று அடி இடைவெளி இருக்குமாறு நிற்க வேண்டும்.3 கைகள் பக்கவாட்டில் நீட்டி இருக்க வேண்டும்.4 பின், இடதுபுறம் மெல்ல வளைந்து, இடது கையால் இடது பாதத்திற்கு பின்புறம், தரையில் தொட வேண்டும்.5 கழுத்தை மெல்ல வலப்பக்கம் திருப்ப வேண்டும். வலது தோளை தொடுவதுபோல் வைக்க வேண்டும்.6 வலது கையை மேலே உயர்த்த வேண்டும்.7 வலது கையையும், இடது கையையும் ஒன்றுக்கொன்று நேர்எதிர் திசையில் வைத்திருக்க வேண்டும்.8 நிமிர்ந்து மறுபடியும் வலதுபுறம் செய்ய வேண்டும்.- டாக்டர் வீ.கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி யோகா பவுண்டேஷன், சென்னை. 93810 32012