உள்ளூர் செய்திகள்

சூரிய நமஸ்காரம்!

காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என, பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வோம். ஆனால், அதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும், 24 யோகாசனங்கள் தான் சூரிய நமஸ்காரம். உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி முறைகளிலேயே சிறப்பானது, சூரிய நமஸ்காரம். மற்ற உடற்பயிற்சிகளோடு பொருத்திப் பார்த்தால் கூட, அவற்றையெல்லாம் விட மேன்மையானது, சூரிய நமஸ்காரம். சூரிய நமஸ்காரம், தன்னளவில் ஒரு முழுமையான பயிற்சி. விழிப்புணர்வோடு செய்பவருக்கு சூரிய நமஸ்காரம் அற்புதங்களை நிகழ்த்தும். நீங்கள் யோகாசனங்கள் செய்ய துவங்கிய உடன், அதை வாழ்க்கையின் ஒரு ஒழுக்கநெறியாகவே கடைப்பிடிக்க வேண்டும்; அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உடல் ஆரோக்கியமாக உள்ளது என்பதை, உடல் வளைந்து கொடுக்கும் தன்மை, பலம், தொடர்ந்து ஒரு செயலை செய்யும் வல்லமை மற்றும் வேகமாக செயல்படுகின்ற திறன் ஆகிய நான்கு விஷயங்களின் அடிப்படையில் தான் கணக்கிட வேண்டும். இந்த நான்கு விஷயங்களையும் சூரிய நமஸ்காரம் கொண்டு வரும். சூரிய நமஸ்காரம், உடல் எடையை குறைக்க உதவும். அதில் சிறிய மாற்றம் செய்தால், எடையைக் கூட்டவும் செய்யலாம். பயிற்சி பெற்ற யோக ஆசிரியரின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே செய்ய வேண்டும்.-சிவரிஷி, சத்தியானந்த யோக மைய நிறுவனர்98417 38069


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !