உள்ளூர் செய்திகள்

நாங்க இப்படிதானுங்க!: கவனத்தை சிதறடிக்கும் மொபைல்!

என்னுடைய, 18 வயது வரை, ஓடியதே இல்லை. கோபிசந்த் அகாடமியில் சேர்ந்த புதிதில், அவர்கள் தரும் பயிற்சியை, என்னால் செய்ய முடியவில்லை. சாதாரண விவசாய பின்னணியில் இருந்து வந்த எனக்கு, முறையான பயிற்சி என்பதே தெரியாது. முதன்முறையாக, 2 கி.மீ., துாரம் ஓடியபோது, என் இதயம், 180 - 200 என்று துடித்தது; சுவாசம் நின்று போனது.பதினெட்டு வயதிற்கு மேல் பயிற்சி ஆரம்பித்து, சர்வதேச போட்டிகளில் வெல்லும் நிலைக்கு வந்துள்ளேன். இன்றும், தீர்மானமாக அட்டவணை போட்டு செயல்படுவதில்லை.மேட்ச், ஒர்க் - அவுட் நேரத்தில், மொபைல் போனை தொடுவதில்லை என்பதில், கவனமாக இருப்பேன். இதனால், செய்யும் வேலையில் நுாறு சதவீதம் கவனம் செலுத்த முடியும் என்பதை, அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.இனிப்பு சாப்பிட மிகவும் பிடிக்கும்; ஆனால், வெள்ளை சர்க்கரை, தசைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முற்றிலும் தவிர்த்து விட்டேன். எம்.எஸ்.தோனி போல, எந்த சூழ்நிலையையும், இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்கிறேன்.- கிடம்பி ஸ்ரீகாந்த்பேட்மிட்டன் ஆட்டக்காரர், ஐதராபாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்