நாங்க இப்படிதானுங்க!: போட்டிகளில் நம்பிக்கை இல்லை!
'ரியோ ஒலிம்பிக் நடப்பதற்கு முன், என் முழங்காலில் ஏற்பட்ட காயம், என் உடல் தகுதியை வெகுவாகக் குறைத்து விட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின், முழங்காலில் மட்டுமே கவனம் செலுத்தியது, என், பிட்னெசை குறைத்து விட்டது. தற்போது போட்டிகள், கோப்பை, மெடல்களில் நம்பிக்கை இல்லை. அடுத்த ஓராண்டிற்குள், முழு உடல் தகுதி பெற வேண்டும் என்பதில் தான், என் கவனம்' என, சொல்லும் செய்னா, 'காலையில் முதல் உணவாக சாப்பிடும் முட்டை, நாள் முழுவதும் எனர்ஜி தரும்' என்கிறார். சீரான இடைவேளையில் வேக வைத்த தானியங்கள், காய்கறிகள், 7:30 மணிக்குள் இரவு உணவு சாப்பிடுகிறார். சர்வதேச ஆட்டக்காரருக்கு தேவையான உடற்பயிற்சிகளை, வாரத்தில் ஆறு நாட்கள் கடுமையாக செய்கிறார்.-செய்னா நேவல்,பேட்மின்டன்