உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / பால் மணம் மாறாத வயதில் எழுத்தாளரான கலசன்

பால் மணம் மாறாத வயதில் எழுத்தாளரான கலசன்

சென்னையில் நடந்துவரும் 47 வது புத்தகக்காட்சியை சுற்றிவரும் போது அந்தக் காட்சி கண்ணில் பட்டது.புத்தகம் விற்கும் அரங்கு ஒன்றின் வாசலில் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை,இடுப்பில் கட்டிய துண்டு, மார்பில் ருத்ராட்ச மாலை, நெற்றி நிறைய விபூதி பட்டை, மயக்கும் புன்சிரிப்புடன், பால்மணம் மாறாத முகங்கொண்ட சிறுவன் ஒருவன் கைகளில் சில புத்தகங்களை வைத்துக்கொண்டு சிவபுரம் புத்தக அரங்கில் விற்பனை செய்து கொண்டு இருந்தான்.நெருங்கி விசாரித்த போதுதான் தெரிந்தது, அந்தப்புத்தகங்கள் அனைத்தும் அந்தச்சிறுவனே எழுதியது என்று.சென்னை வளசரவாக்கத்தில் செயல்பட்டுவரும் சிவபுரம் அறக்கட்டளை, குருவாக இருப்பவர் சிவபுரம் ஐயா தம்பிரான் தோழர் கபிலனார்.இவர் மன்றத்தின் உறுப்பினர் குடும்பத்து பிள்ளைகளுக்கு மெய்யறிவு பாடம் நடத்தி வருகிறார். மூன்று வயது முதல் எத்தனை வயதுவரை வேண்டுமானாலும் மெய்யறிவைக் கற்றுக் கொள்ளலாம்.தமிழை, சிவனை, நல்லொழுகத்தை, தத்தம் திறமையை அறியும் அறிவை உணர்த்துவதே இந்த மெய்யறிவாகும்.இவரிடம் பாடம் படித்த சபரீஷ்--பிரதீபா தம்பதியினரின் மகன் கலசன் பத்து வயதாகும் போது சிவபாத பூஜை செய்யும் போது அவனுக்குள் சிவபெருமான் திருவருள் வெளிப்பட்டது அன்று முதல் கவிதை எழுத ஆரம்பித்தான், கவிதைகள் நன்றாக இருக்கவே அனைவரும் ஊக்குவித்தனர்.அன்று முதல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆன்மீகம், சமூகம், நட்பு, அன்பு, உண்மை, ஒழுக்கம் என்பதை வலியுறுத்தி சிறுசிறு கவிதை எழுத ஆரம்பித்தான்.அந்தக் கவிதைகளை தொகுத்து 'கலசம் வருகிறது' என்ற தலைப்பில் புத்தகம் போடப்பட்டது அந்தப் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து 'நெஞ்சே ஒரு தாளாக' 'அடியேனை ஆண்ட இன்பொருளே' 'வானத்தை வாழ்த்திவிட்டு உறங்கினேன்' என்பது போன்ற தலைப்பில் கவிதை புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.அந்தக்கவிதை புத்தகங்களைத்ததான் புத்தகக்காட்சியில் விற்பனை செய்து கொண்டு இருந்தார்.கலசம் வருகிறது என்ற புத்தகத்தில்மனதைக் கொடுத்தால் பகைக்கிறார்கள்காசைக் கொடுத்தால் நடிக்கிறார்கள்இதில் தெய்வத்தைக்கூட மறக்கிறார்கள்...என்ற வரிகளைப் படித்த போது இவ்வளவு ஆழமான வரிகளின் அர்த்தம் இந்த வயதில் உணர்ந்துதான் எழுதியிருக்கிறாரா? என்று அவரிடம் கேட்ட போது தெளிவான தீர்க்கமான பதில் கிடைத்தது.உங்கள் வயதில் உள்ள குழந்தைகளைப் போல உங்கள் உடையோ, உருவமோ இல்லையே.. என்ற வருத்தம் உங்களுக்கு உண்டா என்று கேட்ட போது? வருத்தமா! அறவே கிடையாது, மகிழ்ச்சிதான் மனம் நிறைய இருக்கிறது.நான் என் குழந்தை பருவத்திற்குரிய எந்த சந்தோஷத்தையும் இழக்கவில்லை, குறைக்கவில்லை, அதே நேரம் பத்தோடு பதினொன்றாக இருக்கவும் விரும்பவில்லை.வாழ்க்கை என்பது அறத்துடன் வாழ்தலே என்ற எங்கள் குருவின் கொள்கையில் வாழ்கிறேன், வளர்கிறேன் ஆசி கூறி வாழ்த்துங்கள், எனது புத்தகங்களை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு பரிசாக கொடுங்கள், ஈசனையும் தமிழையும் எக்காலமும் மறக்காமல் இருக்க கற்றுக்கொடுங்கள் என்ற இந்தச்சிறுவனிடம் பேசுவதற்கான எண்: 9025309680.- -எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
பிப் 15, 2024 13:54

பாராட்டுக்கள் . இங்குதான் தினமலர் மற்றும் திரு முருகராஜ் ஐயா நிற்கிறார்கள். காரணம் இன்றைய இளைஞர்களை குறிப்பாக சிறு குழந்தைகளைக்கூட மீடியா விட்டுவைக்கவில்லை. திரும்பும் இடமெல்லாம் எந்த ஒரு பொருளுமே இல்லாத தமிழ் சொற்கள் அடங்கிய பாடல்கள் அதற்க்கு ஒரு ஆட்டம், பாட்டம் இதைக் கற்றுக்கொண்டு நம் ஊர்களில் உள்ள சின்ன திரை ஊடகங்களில் வெளிவந்து பெரும் புகழும் வாங்குவதற்காக வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு தங்கி பல லட்சம் பணத்தை செலவு செய்து வரும் நிலையில். எல்லா நிலைகளிலும் ஒதுக்கப்பட்ட, ஓரம்கட்டப்பட்ட, வளர்ச்சி அடையாமல் பார்த்துக்கொள்ள பல முட்டுக்கட்டைகளால் தினம் தினம் பல இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டு இருக்கும் நிலையில் "பால் மணம் மாறாத வயதில் எழுத்தாளரான கலசன்." ..என்ற ஒரு அறிய நிஜக்கதையை நமக்கு மிக அழகாக வெளிப்படுத்திய உங்களுக்கு எண்களின் பாராட்டுக்கள். அதிலும் நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்திராக்ஷம் என்று, மிக எளிமையாக தமிழ் கலாச்சார உடை அணிந்து, புத்தகக் கண்காட்சியில் துஜான் படித்த புத்தகத்தை, தானே அங்கிருந்த வண்ணம் எல்லோருக்கும், காட்சியளித்து வரும் அந்த சிறுவனின் படைப்புகளில் மிகவும் கவர்ந்த சில வரிகள் கவிஞர்களையே நிலைகுலையுஞ் வைக்கும் அளவுக்கு உண்மை நிலையை எடுத்துக்காட்டி, தமிழை, மனித வளத்தை, வளர்க்க சிறுவயது முதல் படைத்த படைப்புகளை வைத்து நம் இல்லத்தில் வளரும் அதுவும் தவறாக வளர்த்து வரும் சில பெற்றோர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மிக மிக மாண்புடன் , யார் மனமும் புண்படாமல் அதே நேரத்தில் "வாழ்க்கை என்பது அறத்துடன் வாழ்தலே என்ற எங்கள் குருவின் கொள்கை களில் வாழ்கிறேன் " என்ற அந்த சிறுவனின் திருவாய் மலர்ந்தருளிய நல்லதொரு குருவின் ஆசியுடன் மிக மிக அழகாக , ஒவ்வொரு வரியிலும் பல கருத்துக்களுடன் வெளிவந்த இந்த நிஜக்கதை , நிஜக்கதையாக இருப்பதை இவ்வுலகுக்கு காட்டிய தங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி . தமிழ், தமிழ் , தமிழுக்காக நாங்கள் என்று கூறி அவர்கள் குடும்பத்தார்களை வெளிநாடுகளில் படிக்க வைத்து , தமிழே படித்தக்கதெரியாத மாபெரும் குடும்பத்தினர்கள் கண்ணில் இந்த செய்தி போய்சேரவேண்டும் என்பதே எண்களின் விருப்பம் . வந்தே மாதரம்


N Annamalai
பிப் 14, 2024 11:41

வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை