உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

அக்டோபர் 9, 1874: உலக அஞ்சல் நாள்இ-மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் என்று தகவல்கள் பகிரப்பட்டாலும், கடிதம் அனுப்பிய காலத்தை மறக்க முடியாது. உலக தபால் யூனியன் ஆரம்பிக்கப்பட்ட தினத்தைக் கொண்டாட, இந்த நாள் அறிவிக்கப்பட்டது. இந்திய அஞ்சல் நாள் அக்டோபர் 10ல் கொண்டாடப்படுகிறது.அக்டோபர் 10, 1906: ஆர்.கே. நாராயண் பிறந்த நாள்தன் படைப்புகளின் மூலம், உலக அளவில் இந்திய இலக்கியத்துக்குப் புகழ் சேர்த்தார். நாவல்களில் இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், சமுதாயத்தின் நிலை என அனைத்தையும் பதிவு செய்தார். இவரது தம்பி கார்டூனிஸ்ட் ஆர்.கே. லஷ்மண். அக்டோபர் 11, 2011: சர்வதேச பெண் குழந்தைகள் நாள்குழந்தைத் திருமணம், வன்கொடுமை போன்றவற்றால் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கல்வி, மருத்துவம், சட்ட உரிமை ஆகியவை மறுக்கப்படுகின்றன. பெண் குழந்தைகளுக்கு சமத்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த, ஐ.நா. சபை இந்த நாளை அறிவித்தது.அக்டோபர் 14, 1970: உலக தர நிர்ணய நாள்உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. நுகர்வோருக்குத் தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.அக்டோபர் 15, 2008: உலக கை கழுவும் நாள்கைகளில் உள்ள கிருமிகளால் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். மாணவர்களிடம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐ.நா.சபை இந்த நாளை அறிவித்தது.அக்டோபர் 15, 1931: அப்துல் கலாம் பிறந்த நாள்அறிவியலாளர்; இந்தியாவின் 11வது குடியரசு தலைவர். ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபட்டதால் 'ஏவுகணை நாயகன்' என்று அறியப்படுகிறார். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !