உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / யோகா தின கொண்டாட்டம்.

யோகா தின கொண்டாட்டம்.

சர்வதேச யோகா தினமான நேற்று பிரதமர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைவரும் யோகா செய்து மகிழ்ந்தனர்.இது பத்தாவது சர்வதேச யோகா தினமாகும்.இந்த பத்து வருடத்தில் யோகாவை பிரதமர் பல மடங்கு உலக அரங்கில் உயர்த்திவைத்துள்ளார்.இதற்கு உதாரணமாக நேற்று இந்தியாவில் மட்டுமின்றி ஜப்பான் உள்ளீட்ட பல்வேறு நாடுகளிலும் பொதுவெளியில் மக்கள் யோகா செய்து மகிழ்ந்தனர்.உ.பி.,முதல்வர் யோகி ஆதித்யா வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் வழக்கமாகவே அன்றாடம் யோகா செய்பவர் என்பதால் சிரமமான பல யோகாசனங்களைக்கூட சாதாரணமாக செய்தார்.நதியை பெருமைப்படுத்தும் விதத்தில் நடு ஆற்றில் கொல்கத்தாவின் ஹீக்ளி ஆற்றில் பெண்கள் யோகா செய்தனர்.ராணுவ வீரர்கள் இமயத்தில் பனி மழையில் இருந்தபோதும் யோகா செய்து அசத்தினர்.சாதுக்கள் சந்தோஷமாக யோகா செய்தனர்.மொத்தத்தில் யோகா தினத்தை மக்கள் நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்தனர்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி