உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / புகைப்படத்துறைக்கு உரமூட்டும் ஏஐ தொழில்நுட்பம்

புகைப்படத்துறைக்கு உரமூட்டும் ஏஐ தொழில்நுட்பம்

நாளுக்கு நாள் வளர்ந்துவரும் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் புகைப்படத்துறைக்கு வலு சேர்க்கும் என புகைப்படத்துறை நிபுணர் அசோக் கன்டிமல்லா கூறினார்.மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி சார்பாக உலக புகைப்பட தின விழா சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அசோக் கன்டிமல்லா,'புகைப்படத்துறை நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் பேசினார்,அவர் பேசியதாவது..புகைப்படத்துறை கடந்த ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்ததைவிட சமீபகாலத்திய அதன் வளர்ச்சி வேகமானது,விவேகமானது.இயற்கை காட்சியைக் காணும் ஒரு ஒவியர் அதை படமாக வரையும் போது இயற்கை காட்சிக்கு இடையூறாக இருந்த மின்சார கம்பிவடத்தை தவிர்த்துவிட்டு பார்வையாளர்களுக்கு என்ன தேவையோ அந்தக்காட்சியை மட்டும் வரைந்து தருவார்,பார்வையாளர்களும் அதை பாராட்டி வரவேற்று ஏற்றுக்கொள்வர் ஆனால் அதையே புகைப்படக்கலைஞர் செய்தால் 'நேச்சுராலிட்டி' இல்லை என்று விமர்சனம் செய்வர் ஆனால் ஏஐ தொழில்நுட்பம் இப்போது ஒவியரின் பணியைத்தான் புகைப்படத்துறையில் செய்கிறது,எடுக்கும் படங்களை மெலும் மெருகூட்டி அழகு சேர்த்து தருகிறது.எல்லை மீறாதவரை இதில் தவறு ஏதும் இல்லை.இருக்கும் வெளிச்சத்தில் எடுக்கப்படும் படங்களில் காணப்படும் 'நாய்ஸ்' எனப்படும் புள்ளிகளை வெகுவாகக் குறைக்கிறது.கறுப்பு வெள்ளை படங்களை சரியான வண்ணக்கலவையுடன் தருகிறது,எடுத்த படத்தின் இயல்பை மாற்றுகிறது,இருப்பதை இல்லாததாக்குகிறது,இல்லாததை இருப்பதாகக் காட்டுகிறது.இதெல்லாம் சரியா?தவறா? என்ற விவாதத்திற்கு பதில் வருவதற்குள் ஏஐ தொழில்நுட்டம் புகைப்படத்துறையில் பல மாற்றங்களை தந்து கொண்டே இருக்கிறது.தொழில்நுட்ட வளர்ச்சி என்பது காலத்தின் கட்டாயம்,ஸ்மார்ட் போன் போட்டோகிராபியின் வளர்ச்சியும் அப்படித்தான் அபரிமிதமாக இருக்கிறது,பாயிண்ட் அண்ட் சூட் என்ற கேமராக்களையே ஒட்டு மொத்தமாக காணாமல் போகச் செய்துவிட்டது,ஒரு ஆக் ஷன் போட்டோகிராபி மட்டும்தான் ஸ்மார்ட் போனால் எடுக்கமுடியாது மற்ற எல்லாவற்றையும் எடுக்க முடியும் என்ற நிலைக்கு அது வந்து கொண்டு இருக்கிறது.இன்றைய கேமரா நிறுவனங்கள் மிர்ரர்லெஸ் கேமராவை மட்டும்தான் உற்பத்தி செய்கின்றன அதைத்தான் மார்கெட்டிங் செய்கின்றன ஆகவே டிஎஸ்எல்ஆர் கேமரா போல மிர்ரர்லெஸ் கேமரா இல்லை என்று பேசுவதில் அர்த்தம் இல்லை பழைய ஸ்டாக் டிஎஸ்எல்ஆர்.,கேமராக்கள் மட்டுமே விலைக்கு வருகிறது அதற்கு டெக்னிக்கல் சப்போர்ட்டும் கிடையாது ஆகவே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மிர்ரர்லெஸ் கேமராதான் இனி கோலோச்சப் போகிறது.மேற்கண்டவாறு அசோக் கன்டிமல்லா பேசினார்,அவருக்கு பள்ளி தாளாளர் அசோக் கரோடியா பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்,மூத்த உறுப்பினர் விவேகானந்தன் நினைவு பரிசு வழங்கினார்,மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி தலைவர் டாக்டர் அழகானந்தம் வரவேற்றார்,சாமிநாதன் வரவேற்றார்,,புகைப்பட போட்டி நடைபெற உதவிய பாலசுப்ரமணியம்,ரங்கராஜன்,ரவி ஆகியோருககு பாராட்டு தெரிவிக்கப்பட்டது,பாலு நன்றி தெரிவித்தார்.எம்பிஎஸ்.,சார்பாக நடைபெற்ற அகில இந்திய புகைப்படப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற படங்கள் திரையிடப்பட்டன.கூட்டத்திற்கு பள்ளி மாணவ,மாணவியர் உள்பட திரானபேர் கலந்து கொண்டனர்.--எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ