உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / உடல் பருமனை குறைக்க உன்னத வழிகள் என்ன: உணவியல் நிபுணர் சொல்வதை கேளுங்க

உடல் பருமனை குறைக்க உன்னத வழிகள் என்ன: உணவியல் நிபுணர் சொல்வதை கேளுங்க

அனைவருக்குமே தவிர்க்க முடியாதது உணவு. சிலர் தங்களுக்கு பிடித்தமான உணவு கிடைத்து விட்டால் ஒரு கை பார்க்காமல் எழுந்திருக்க மாட்டார்கள். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விடக்கூடாது. நாம் எடுத்து கொள்ளும் முறையில் தான் உணவு மருந்தாக திகழ்கிறது என்கிறார் உணவியல் நிபுணர் டாக்டர் சவுந்தர்யா. ஊட்டசத்து நிபுணர், உணவியல் நிபுணர், எழுத்தாளர், பேச்சாளர், கல்லுாரி விரிவுரையாளர், உணவு ஆலோசகர், ஆராய்ச்சியாளர் பல பரிமாணங்கள் இவருக்கு உண்டு. ஊட்டச்சத்து, சரிவிகித உணவு தொடர்பாக இவர் செய்த ஆராய்ச்சி, முனைவர் பட்ட ஆய்வு, ஆய்வு கட்டுரைகளுக்காக யங் சயின்டிஸ்ட் அவார்டு பார் கம்யூனிட்டி நியூட்டிரிஷன், மிகவும் கவர்ந்த இளம் ஆராய்ச்சியாளர், நாட்டின் சிறந்த டயட்டிசியன், நியூட்டிரிஷியன் அவார்டு உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் பேசினோம்... பிறந்து வளர்ந்த இடம் சென்னை. சின்ன வயதில் அம்மா லட்சுமி கைவண்ணத்தில் பரிமாறப்படும் விதவிதமான உணவுவகைகளை விட மாட்டேன். எங்கள் வீட்டில் சளி, காய்ச்சல் என்றால் கஷாயம் கொடுப்பர். பாட்டி, தாத்தா, அம்மா இந்த பழக்கத்தை கையாண்டதால் அதில் விரிவாக படித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. கிளினிக்கல் நியூட்டி ரிஷியன் டயட்டீக்ஸில் இளங்கலையும், புட் அண்ட் நியூட்டிரிஷியனில் முதுகலையும் முடித்தேன். புட் சயின்ஸ் அண்ட் நியூட்டிரிஷியனி ல் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றேன். அம்மா அணைப்பில் வளர்ந்தவள். அவர் தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தபடி என்னை படிக்க வைத்தார். இதனால் மேல்நிலை பள்ளி படிக்கும் போது பகுதிநேர வேலைகளை செய்து வந்தேன். மருந்துக்கடை போன்ற இடங்களில் பகுதி நேரமாக பணிபுரிந்தபடி முனைவர் பட்டத்தை பெற்றேன். இது சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற அனுபவத்தை தந்தது. தனியார் கல்லுாரியில் கிளினிக்கல் நியூட்டிரிஷியன் அண்ட் டயடிக்ஸ் துறை உதவி பேராசிரியை, சீனியர் கிளினிக்கல் டயட்டிஷியனாக பணிபுரிந்து கொண்டே சமூக வலைதளங்களில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். உடல் பருமன் பிரச்னை இப்போது பரவலாக பேசப்படுவதால் பலர் உணவு எடுப்பதை தவிர்க்கின்றனர். என்னை பொறுத்தவரையில் எல்லோரும் எல்லா வகையான உணவுகளையும் எடுத்து கொள்ளலாம். எந்த வகை உணவை எந்த நேரத்தில் எடுக்க வேண்டும். எப்படி பட்ட கலவையான உணவை எடுக்க வேண்டும். உணவு எடுப்பதுடன் உடற்பயிற்சிகளை செய்கிறாமோ என கவனிக்க வேண்டும். நமக்கு முந்தைய தலைமுறை வரை எல்லோருமே எல்லா வகையான உணவு வகைகளையும் எடுத்து கொண்டனர். உணவு எடுத்து கொண்டது மட்டுமின்றி அவர்களுக்கு உடல் உழைப்பும் இருந்தது. ஆனால் இன்று பெரும்பான்மையினர் டெஸ்க் ஒர்க் செய்து வருகின்றனர். பல மணி நேரம் உட்கார்ந்தும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தும் வேலை செய்கின்றனர். இதனால் உணவு எடுத்தவுடன் கலோரிகள் எரிக்கப்படுவதில்லை. நம் முன்னோர் உணவு எடுத்தபின் கடுமையான வேலைகளை செய்ததால் கலோரிகள் எரிக்கப்பட்டன. இதனால் 90 வயதை கடந்தவர்களும் நல்ல திட காத்திரமான உடல் அமைப்புடன் இருந்தனர். இன்று நிலைமை மாறி விட்டது. கட்டுப்பாடாக உணவு உடல் எடை குறைக்க சிலர் கடுமையாக பயிற்சி (ஓர்க் அவுட்) எடுத்து கொள்கின்றனர். ஆனால் பயிற்சி எடுத்து கொள்கிறோம் என்பதற்காக கட்டுப்பாடின்றி உணவும் எடுக்கின்றனர். 20 சதவீதம் கடுமையாக ஓர்க் அவுட் செய்து 80 சதவீதம் கட்டுப்பாடாக உணவு எடுத்து கொண்டால் போதும்; குறிப்பிட்ட சில வாரங்களில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். 'பளீச்' என தெரிய கண்ட கிரீம்களையும் தேய்க்கின்றனர். உணவில் தக்காளி, பாதாம் பருப்பு, தண்டுக்கீரை அடிக்கடி எடுத்து கொண்டால் தோலை பாதுகாக்கலாம். சமீபத்தில் கர்நாடகாவில் பானிபூரி கடைகளில் அம்மாநில உணவுபாதுகாப்பு துறையினர் சோதனை செய்த போது தேவையில்லாத நிறமூட்டிகளை கலந்தது தெரிய வந்தது. இன்டிகோ, கரும்பச்சை, நீலம் போன்ற நிறங்களுக்காக தேவையில்லாத சில கெமிக்கல் கலந்ததும் தெரிந்தது. குழந்தைகள் விரும்பும்பட்சத்தில் வீட்டிலேயே பானிபூரி தயாரித்து கொடுக்கலாம். உணவை மருந்தாக எடுத்து கொண்டால் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. பொதுமக்களிடம் சத்தான, சரிவிகித உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இவரை வாழ்த்த 63699 50757


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை