முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (10.4.2026 - 16.4.2026)
கும்பம்: நவக்கிரக வழிபாடு நன்மை தரும்.
அவிட்டம் 3,4: ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. செய்து வரும் தொழிலில் உங்களுடைய நேரடி கண்காணிப்பு அவசியம். புதியவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்.

சதயம்: ராசிக்குள் சஞ்சரித்த சனி இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டதால் உங்களிடம் இருந்த மந்த நிலை மாறும். ஐந்தாமிட குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால்  செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செலவிற்கேற்ற வருமானம் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும், திருமண வயதினருக்கு வரன் வரும், புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 


Advertisement Tariff