முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
மகரம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சகாய ஸ்தானத்தில் சூரியன், சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமாக நடைபோடுவீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும், தடைபட்ட வேலை நடக்கும்.

திருவோணம்: சகாய ஸ்தானம் பலமடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சி லாபமாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். அரசுவழி முயற்சி சாதகமாகும். 

அவிட்டம் 1,2: ருண ரோக ஸ்தானத்தில் குரு, அஷ்டம ஸ்டானத்தில் கேது சஞ்சரிப்பதால்  உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும். எதிரி கை ஓங்கும். உங்கள் வேலைகளில் ஒரு தொய்வு இருக்கும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். சகாய செவ்வாயால் அனைத்தையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். 


Advertisement Tariff