முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (10.4.2026 - 16.4.2026)
மகரம்: கபாலீஸ்வரரை வழிபட சங்கடம்  விலகும்.
உத்திராடம் 2,3,4: சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த பிரச்னை போராட்டம் எல்லாம் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். ஆதாயத்தை நோக்கி நடைபோடுவீர்.

திருவோணம்: சனி, செவ்வாய், திங்கள்கிழமை வரை சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பதுடன் அவற்றை முடித்து லாபமும் காண்பீர். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தொழில், வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

அவிட்டம் 1,2: சகாய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களிடம் இருந்த மந்த நிலை மாறும், தடைபட்ட வேலை நடந்தேறும், உடல்நிலை சீராகும், வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். 


Advertisement Tariff