உள்ளூர் செய்திகள்

ஒட்டகச்சிவிங்கி கற்றுத்தரும் பாடம்

பிறந்த குழந்தையை ஒரு தாய் அன்போடு தடவிக்கொடுப்பாள். மனிதர்கள் மட்டுமல்ல, நாய்கூடத் தம் குட்டிகளைப் பாசத்தோடு நாவால் வருடும். ஆனால் ஒட்டகச்சிவிங்கி என்ன செய்யும் என்று தெரியுமா... தாயின் பாதுகாப்பான கருப்பையிலிருந்து மண்ணைத் தொடும் குட்டி, கண்ணை மெல்லத் திறக்கும். உடனே ஒட்டகச்சிவிங்கி முழுபலத்தோடு குட்டியை ஓங்கி உதைக்கும். வலியைச் சமாளித்து மெல்ல எழுந்திருக்க முயற்சி செய்யும். மீண்டும் எட்டி உதைக்கும். விழுந்த மறுவிநாடியே எழுந்து நிற்க, குட்டி எப்போது கற்றுக்கொள்கிறதோ அதுவரை இந்த 'உதைப்பாடம்' தொடரும். ஒட்டகச்சிவிங்கிகளுக்கு இதயமே கிடையாதா.. என அனைவருக்கும் தோன்றலாம். ஆனால் அது இயற்கையின் நியதி. சிங்கம், புலி ஆகிய விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேகமாக ஓட வேண்டும். அப்படி ஓடும்போது விழுந்துவிட்டால், கண் சிமிட்டும் நேரத்தில் எழுந்து ஓடத்தெரிய வேண்டும். இதற்காகவே இந்த பயிற்சி தேவைப்படுகிறது. இதுபோலத்தான் நாம் தவறு செய்யும்போது பெற்றோர், ஆசிரியர்கள் நம்மை தண்டிப்பார்கள். நாம் வாழ்க்கையில் எங்கும் தோற்றுவிடக்கூடாது என்பதற்கே அவர்கள் நம்மை தண்டிக்கிறார்கள். எனவே அவர்களை குறை சொல்லாமல் வாழ்வில் முன்னேறப்பாருங்கள்.