இதயமே.. இதயமே...
UPDATED : ஜன 07, 2022 | ADDED : ஜன 07, 2022
மரக்கிளை ஒன்றில் ஆண் புறாவும், பெண் புறாவும் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது விநோதமான சத்தம் வந்தது. அவை சுதாரிப்பதற்குள் வேடன் ஒருவன் பெண் புறாவை துப்பாக்கியால் சுட்டான். பிறகு புறா விழுந்த இடத்திற்கு சென்றான். அங்கு அவன் கண்ட காட்சி, கண்களில் இருந்து நீரை வரவைத்தது. உயிரோடு உயிராக இருந்த தன் இணையை ஓரிருமுறை சுற்றி வந்தது ஆண்புறா. பறந்து, ஊசியாக இருந்த ஒரு மரக்கிளையில் மோதியது. புறாவின் ரத்தம், வேடன் மீது பட்டது. வேடனின் கண்ணீரோ புறாவின் மீது தெறித்தது. மனிதர்களை போலவே சகஉயிர்களும் அன்பை வெளிப்படுத்துகின்றன என்பதை உணர்ந்து கொண்டான். துப்பாக்கியை அன்பின் வசம் ஒப்படைத்தான். மனதில் அன்பு இருந்தாலே கடினமான இதயமும் கரையும் என்பது உண்மைதானே...