அர்ஜூனனுக்கு 12
UPDATED : அக் 29, 2021 | ADDED : அக் 29, 2021
கண்ணனுக்கு நெருங்கிய நண்பன் அர்ஜூனன். 'அர்ஜுனன்' என்பதற்கு 'துாய இயல்புடையவன்' என்பது பொருள். இவனுக்கு 12 சிறப்பு பெயர்கள் உண்டு. பாண்டவன் - பாண்டுவின் மைந்தன்தனஞ்ஜெயன் - செல்வத்தை சேகரிப்பவன்கபித்வஜன் - குரங்குக்கொடி (அனுமன்) உடையவன்குடாகேசன் - துாக்கத்தை வென்றவன்பார்த்தன் - பிரிதாவின் மைந்தன்அனகன் - பாவமற்றவன்பரந்தாபன் - எதிரிகளை வாட்டுபவன்கவுந்தயேன் - குந்தியின் மைந்தன்பாரதன் - பாரதத்தில் பிறந்தவன்கிரீடி - கிரீடம் தரித்தவன்குருநந்தனன் - குருகுலத்தில் தோன்றியவன்ஸ்வயஸாசின் - இடக்கையால் அம்பு எய்பவன்