உள்ளூர் செய்திகள்

வருடத்தில் 25 ஏகாதசி

திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். இதில் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும் போது செல்வச்செழிப்பும், வாழ்வுக்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.01. பாபமோசனிகா ஏகாதசி - சித்திரை மாதம் தேய்பிறை02. காமதா ஏகாதசி - சித்திரை மாதம் வளர்பிறை03. வருதினி ஏகாதசி - வைகாசி தேய்பிறை 04. மோகினி ஏகாதசி - வைகாசி வளர்பிறை05. அபரா ஏகாதசி - ஆனி தேய்பிறை06. நிர்ஜலா ஏகாதசி - ஆனி வளர்பிறை 07. யோகினி ஏகாதசி - ஆடி தேய்பிறை08. சயினி ஏகாதசி - ஆடி வளர்பிறை09. காமிகா ஏகாதசி - ஆவணி தேய்பிறை10. புத்ரகா ஏகாதசி - ஆவணி வளர்பிறை11. அஜாரகா ஏகாதசி - புரட்டாசி தேய்பிறை12. பத்மநாபா ஏகாதசி - புரட்டாசி வளர்பிறை13. இந்திரா ஏகாதசி - ஐப்பசி தேய்பிறை14. பாபங்குகா ஏகாதசி - ஐப்பசி வளர்பிறை15. ரமா ஏகாதசி - கார்த்திகை தேய்பிறை 16. பிரபோதினி ஏகாதசி - கார்த்திகை வளர்பிறை17. உற்பத்தி ஏகாதசி - மார்கழி தேய்பிறை18. வைகுண்ட ஏகாதசி - மார்கழி வளர்பிறை19. ஸபலா ஏகாதசி - தை தேய்பிறை20. புத்ரதா ஏகாதசி - தை வளர்பிறை21. ஷட்திலா ஏகாதசி - மாசி தேய்பிறை22. ஜயா ஏகாதசி - மாசி வளர்பிறை23. விஜயா ஏகாதசி - பங்குனி தேய்பிறை 24. ஆமலகீ ஏகாதசி - பங்குனி வளர்பிறை25. கமலா ஏகாதசி - இந்த ஏகாதசிக்குரிய தினத்தை பஞ்சாங்கத்திலேயே தெரிந்து கொள்ள முடியும். இந்த திதி வரும் மாதத்தை 'புருஷோத்தம மாதம்' (பெருமாளுக்குரிய மாதம்) என்று சிறப்பிப்பர்.