பக்கத்துக்கு ஒரு பாட்டு
UPDATED : செப் 01, 2016 | ADDED : செப் 01, 2016
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம் தண்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்குஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைபுந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்குசங்கத் தமிழ் மூன்றும் தா.திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்காதலால் கூப்புவர் தம்கை.