குட்டி குட்டி தகவல்கள்
* ஆனி பவுர்ணமியில் மீனாட்சிக்கு உச்சிக்காலத்தில் மா, பலா, வாழை என முக்கனிகளால் அபிஷேகம் செய்கின்றனர். பல கூடைகளில் நிரம்பியிருக்கும் * மீனாட்சியம்மனுக்கு பெற்றோர் இட்ட பெயர் தடாதகை பிராட்டியார். * மதுரையில் மீனாட்சியின் வைர மூக்குத்தி தரிசனம் மிக விசேஷமானது. இவளை வைர கிரீடம் அணிந்த அலங்காரத்தில் சித்திரைப்பிறப்பு, ஆங்கிலப்புத்தாண்டு, தை அமாவாசை நாட்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.* மீனாட்சி சன்னதி எதிரிலுள்ள கோபுரம் அதிக சிற்ப வேலைப்பாடுகளுடன் கொண்டதால் 'சித்திர கோபுரம்' என அழைக்கப்படுகிறது. இதிலுள்ள 25 முகம் கொண்ட சிவன் சிற்பம் கலைநயம் மிக்கது.* மீனாட்சி அம்மன் சன்னதியின் பிரகாரத்தில் திருமலைநாயக்கரின் சிலை உள்ளது. * மீனாட்சியம்மன் சன்னதி எதிரில் கிளிக்கூட்டு மண்டப துாண்களில் ராமாயண, மகாபாரத பாத்திரங்களான அர்ஜுனன், கர்ணன், பீமன், நகுலன், சகாதேவன், வாலி, சுக்ரீவன் சிற்பங்கள் உள்ளன.* பொற்றாமரைக்குளத்தின் வடக்கு கரையில் உள்ள துாண்களில் மதுரை நகரை நிர்மாணித்த குலசேகர பாண்டியன், அமைச்சர் தனஞ்ஜெயன் சிலைகள் உள்ளன.* கிழக்கு வாசல் வழியாக சன்னதிக்குள் நுழையும் பாதையிலுள்ள முதலிப்பிள்ளை மண்டபத்தில் தாருகாவனத்து ரிஷிகள், பிட்சாடனாராக வந்த சிவன், ரிஷிபத்தினிகள், மோகினி வேடத்தில் திருமால் சிற்பங்கள் கலைநயம் மிக்கவை.