உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜூலை 31 ஆடி 15: வடமதுரை சவுந்திரராஜப்பெருமாள் வசந்த உற்ஸவம். படவேடு ரேணுகாம்பாள் புறப்பாடு. திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஆக.1 ஆடி 16: ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.ஆக.2 ஆடி 17: சங்கடஹர சதுர்த்தி. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம். ஆக.3 ஆடி 18: ஆடிப்பெருக்கு. திருப்பதி பெருமாள் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஆக.4 ஆடி 19: தேவகோட்டை ரங்கநாதர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. திருத்தணி முருகன் பால் அபிேஷகம். சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு விழா. ஆக.5 ஆடி 20: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன், திருவாடானை சிநேகவல்லி அம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். கரிநாள். ஆக.6 ஆடி 21: கார்த்திகை விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பிரம்மோற்ஸவம் ஆரம்பம். திருப்போரூர் முருகனுக்கு பால் அபிஷேகம். நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் மகாலட்சுமி அலங்காரம்.