உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஆக.21 ஆவணி 4: வரலட்சுமி விரதம். மதுரை சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பருக்கும், காந்திமதியம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். குலச்சிறை நாயனார் குருபூஜை.ஆக.22 ஆவணி 5: மதுரை சோமசுந்தரர் வளையல் விற்றருளிய காட்சி. இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், திருமோகூர் காளமேகப்பெருமாளுக்கு திருமஞ்சனம். விருதுநகர் சொக்கநாத சுவாமி, அம்பாள் ரிஷபசேவை. அஹோபிலமடம் 2வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.ஆக.23 ஆவணி 6: முகூர்த்த நாள். ஏகாதசி விரதம். மதுரை சொக்கநாதர் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல். தென்காசி, கடையம் இத்தலங்களில் விஸ்வநாதர் தெப்பம். வாஸ்துநாள். காலை 7:23 - 7:59 வரை மனை, மடம், கோயில், கிணறு வாஸ்து செய்ய நன்று. ஸ்ரீபெரும்புதுார் மணவாளமாமுனிகள், மதுரை கூடலழகர், அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு. அஹோபிலமடம் 28வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். குங்கிலியக்கலய நாயனார் குருபூஜை.ஆக.24 ஆவணி 7: மதுரை சோமசுந்தரர் புட்டுத்திருவிழா. குறுக்குத்துறை முருகப்பெருமான் திருவீதிவுலா. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாளுக்கு திருமஞ்சனம்.ஆக.25 ஆவணி 8: பிரதோஷம். மதுரை சுந்தரேஸ்வரர் விறகு விற்றருளிய காட்சி. விருதுநகர் மீனாட்சி, சொக்கநாதர் தேர். சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கிருபானந்த வாரியார் பிறந்தநாள்.ஆக.26 ஆவணி 9: திருவோண விரதம். ரிக்உபாகர்மம். ஓணம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத்தேரில் பவனி. சாத்துார் வெங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள், திருப்பதி பெருமாள் புறப்பாடு. கரிநாள்.ஆக.27 ஆவணி 10: பவுர்ணமி. யஜூர் உபாகர்மம். ஆவணி அவிட்டம். நடராஜர் அபிேஷகம். அவிநாசி சிவபெருமானுக்கு பவுர்ணமி பூஜை. சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.