எந்த நாளும் இனிய நாளே!
UPDATED : செப் 08, 2017 | ADDED : செப் 08, 2017
உங்களுக்கு ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, கண்டகச்சனி நடக்கிறதா! புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சனீஸ்வரர் சன்னதி முன் அமர்ந்து இந்த சனீஸ்வரர் கவசத்தை வாசித்தால், அவர் மகிழ்ந்து அருள்புரிவார்.கருநிறக் காகம் ஏறிகாசினி தன்னைக் காக்கும்ஒரு பெரும் கிரகமானஒப்பற்ற சனீஸ்வரா! உந்தன்அருள் கேட்டு வணங்குகின்றேன்!ஆதரித்து எம்மைக் காப்பாய்!பொருளோடு பொன்னை அள்ளிபூவுலகில் எமக்குத் தாராய்!ஏழரைச் சனியாய் வந்தும்எட்டினில் இடம் பிடித்தும்கோளாறு நான்கில் தந்தும்கொண்டதோர் கண்ட கத்தில்ஏழினில் நின்ற போதும்இன்னல்கள் தாரா வண்ணம்ஞாலத்தில் எம்மைக் காக்கநம்பியே தொழுகின்றேன் நான்!பன்னிரு ராசி கட்கும்பாரினில் நன்மை கிட்டஎண்ணிய எண்ணம் எல்லாம்ஈடேறி வழிகள் காட்டஎண்ணெய்யில் குளிக்கும் நல்லஈசனே உனைத் துதித்தேன்!புண்ணியம் எனக்கு தந்தேபுகழ் கூட்ட வேண்டும் நீயே!கருப்பினில் ஆடை ஏற்றாய்காகத்தில் ஏறி நின்றாய்இரும்பினை உலோகமாக்கிஎள் தனில் பிரியம் வைத்தாய்!அரும்பினில் நீல வண்ணம்அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்பெரும் பொருள் வழங்கும் ஈசாபேரருள் தருக நீயே!சனியென்னும் கிழமை கொண்டாய்சங்கடம் விலக வைப்பாய்!அணிதிகழ் அனுஷம், பூசம்ஆன்றோர் உத்திரட்டாதிஇனிதே உன் விண்மீனாகும்எழில் நீலா மனைவியாவாள்!பணியாக உனக்கு ஆண்டுபத்தொன்பது என்று சொல்வாய்!குளிகனை மகனாய்ப் பெற்றாய்குறைகளை அகல வைப்பாய்எழிலான சூரியன் உன்இணையற்ற தந்தை யாவார்!விழி பார்த்து பிடித்துக் கொள்வாய்விநாயகர் அனுமன் தன்னைத்தொழுதாலோ விலகிச் செல்வாய்துணையாகி அருளைத் தாராய்!அன்ன தானத்தின் மீதுஅளவிலா பிரியம் வைத்தமன்னா சனீஸ்வரா! உன்னைமனதாரப் போற்றுகின்றோம்!உன்னையே சரணடைந்தோம்!உயர்வெல்லாம் எமக்குத் தந்தேமன்னர் போல் வாழ்வதற்கேமணியான வழி வகுப்பாய்!மந்தனாம் காரி நீலாமணியான மகர வாசா!தந்ததோர் கவசம் கேட்டேசனி என்னும் எங்கள் ஈசா!வந்திடும் துயரம் நீக்குவாழ்வினை வசந்தம் ஆக்கு!எந்த நாள் வந்த போதும்இனிய நாள் ஆக மாற்று!