உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* பணவசதி இல்லாமல் நேர்த்திக்கடனைத் தள்ளிப்போடுவது தெய்வ குற்றமாகுமா?டி.ஜெயா, கிழக்குமுகப்பேர்.வசதியில்லை என்று சொல்லும் போது அது தெய்வ குற்றமாகாது. சுவாமிக்கும் தங்கள் கஷ்டம் புரியும் தானே. இதுவும் அவரது சோதனை தான். நேர்த்திக்கடனை செலுத்த வசதிஅளிக்க வேண்டிக்கொள்ளுங்கள். அன்புடன் அருளுவார்.திருமணம் விரைவில் கைகூட என்ன பரிகாரம் செய்யலாம்?எஸ்.ஆண்டாள், தேவகோட்டை.என்ன காரணத்தினால் தடைபடுகிறது என்பதை முதலில் ஜாதகத்தைப் பார்த்து அறிந்து கொண்டு தக்க பரிகாரம் செய்யவேண்டும். திருமணஞ்சேரியில் சிறப்பு பூஜை செய்து சுவாமியின் மாலையை பிரசாதமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.** சனி என்றாலே பலருக்கும் குலை நடுங்குகிறதே......ஏன்?சங்கீதா என்.ஸ்ரீதர், பெங்களூரு.இது அவசியமில்லாத பயம்.'சனி' என்ற சொல்லுக்கு குளிர்ச்சி என்று பொருள். அறிவியலும் சனி கிரகத்தில் பனிக்கட்டி இருப்பதை ஒப்புக் கொள்கிறது. ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளையும் கடந்தே செல்கின்றன. இதில் சனி அதிக பட்சமாக ஒரு கிரகத்தைக் கடக்க இரண்டரை ஆண்டு எடுத்துக் கொள்கிறது. மேலும் நமது ராசிக்கு முன் ராசியில் இரண்டரை ஆண்டு, பின் ராசியில் இரண்டரை ஆண்டு என மொத்தம் ஏழரை ஆண்டு சனியின் கட்டுப்பாட்டில் நாம் இருக்க வேண்டியுள்ளது. இந்த காலத்தில் துன்பம் ஏற்பட சனி பகவான் காரணமில்லை. பல பிறவிகளிலும் செய்த பாவமே காரணம். இதைப் புரிந்து கொண்டால் யாரும் குலை நடுங்க தேவையில்லை. துன்பம் தீர்ந்த பிறகு சனியைப் போல் அள்ளித் தருவாரும் யாருமில்லை. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரையும், அங்குள்ள சனீஸ்வரரையும் தரிசித்தால் நன்மையே நடக்கும்.* நடக்க இயலாதவர்கள் வாகனத்தில் கிரிவலம் வந்தால் பலனுண்டா?ஆர்.கலைவாணி, சென்னை.உண்டு... குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு சாஸ்திரம் விதிவிலக்கு அளித்துள்ளது. நடக்க இயலாத நிலையிலும் கிரிவலம் செய்ய வேண்டும் என்று நினைப்பதே பெரிய விஷயமாயிற்றே!தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றினால் என்ன பலன் கிடைக்கும்?ஜி.யசோதா, செஞ்சி.பருத்தி திரியிட்டு விளக்கேற்றுவது பொதுவாக எல்லா நன்மையும் அளிக்கும். தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றினால் கடன் நீங்கி செல்வ வளம் பெருகும்.சுவாமிசிலை பிரதிஷ்டை செய்யும் போது மருந்து சாத்துவது ஏன்?எஸ்.முருகேசன், திருத்தங்கல்.எட்டு மூலிகைகள் மற்றும் சில பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது அஷ்டபந்தன மருந்து. சுவாமி சிலை ஆடாமல் நிற்பதற்காக சிலை மற்றும் பீடத்தை இணைத்து சாத்தப்படும் இந்த மருந்து தெய்வீகத் தன்மை மிக்கது. கும்பாபிஷேகத்தில் மருந்து சாத்துதல் முக்கியமானது. இதில் குறை நேர்ந்தால் எவ்வளவு செலவு செய்து கும்பாபிஷேகம் செய்தாலும் பலனில்லை. மேலும் சாத்திய மருந்து ஜீரணமானால் நாட்டுக்கும், மக்களுக்கும் தீங்கு ஏற்படும். அதைக் கண்டறிந்து உடனடியாக நாள், நட்சத்திரம் கூட பார்க்காமல், புதுமருந்நு சாத்தி கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என ஆகமம் கூறுகிறது.