உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* கருவில் இருக்கும் குழந்தைக்கு பிறக்கும் முன்னதாகவே பெயரை தேர்வு செய்யலாமா?மா.மதிவாணன், சாக்கோட்டை.கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறியாமல் எப்படி பெயர் தேர்வு செய்வது? இதை அறியும் கருவியைப் பயன்படுத்துவதும் சட்ட விரோதம். வாரிசு என்பது இறைவன் அருளால் கிடைப்பது. குழந்தை செல்வம் கிடைத்த பிறகு அன்போடு பெயர் சூட்டி மகிழலாமே!கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்கிறார்களே.... இதற்கு பரிகாரம் உண்டா?வி.லீலாவதி, சூலூர்.கண்ணேறு (திருஷ்டி) கழித்தல் என்பது ஆண்டாண்டு காலமாய் தமிழர்களால் கடைபிடிக்கப்படும் விஷயம். கண் திருஷ்டி என்பது அழகாக அலங்கரிக்கப்படும் தெய்வங்களுக்குக்கூட ஏற்படும் என்பது நம்பிக்கை. இது அனுபவ ரீதியான உண்மையும்கூட.. கல்லடி பட்டால் சிறிய அளவுதான் பிரச்னை. கண்ணடிபட்டால் பெரிய பாதிப்பு உண்டாகிறது. பூசணிக்காய் அல்லது தேங்காயை வீட்டைச் சுற்றி வந்து உடைத்தல், சாம்பிராணி போடுதல் ஆகியவையே பரிகாரம். ஆனால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்யாத வகையில் இதைச் செய்ய வேண்டும்.** தலவிருட்சம் என்பது தானாக வளருவதா? நம்மால் வளர்க்கப்படுவதா?டி.இசக்கிதேவி, வில்லிவாக்கம்.பழங்காலத்தில் எந்த ஊரிலும் இவ்வளவு ஜனநெருக்கடி மற்றும் வீடுகள் இல்லை. ஆறுகள், குளங்கள், மரம், செடி, கொடிகள் சூழ்ந்த சோலைகளாக இருந்தன. கோவில்களும் பெரிய அளவில் இல்லை. ஏதாவது ஒரு தெய்வ சக்தி வாய்ந்த மரத்தின் அடியில் இறைவன் குடியிருந்தார். அவரையே மக்கள் வணங்கினர். பின்னால் கோவில் உருவாவதும், இறைவன் எந்த மரத்தின் கீழ் இருந்தாரோ அதுவே தலவிருட்சம் ஆயிற்று. நம்மால் வளர்க்கப் படாமல் தாமே தோன்றியவை அவை. அத்தலத்து இறைவனும் தானே தோன்றியவராக விளங்கினார். இந்த தெய்வங்களையே சுயம்பு மூர்த்தி என்கிறார்கள்.* குழந்தைகள் எந்த வயதிலிருந்து விரதம் மேற்கொள்ளலாம்?ஆர்.ஜான்சிராணி, சென்னை.விரதம் எனும் சொல்லுக்கான நேரடி பொருள் கஷ்டம் என்பதாகும். இறை சிந்தனை மாறாமல் அந்தநாளின் பொழுதைக் கழிக்க பசி என்னும் கஷ்டத்தை தாங்கிக் கொள்வதே விரதத்தின் அடிப்படை. இதை எந்த வயதில் குழந்தைகள் புரிந்து கொள்கிறார்களோ அந்த வயதிலிருந்து விரதமிருக்கத் துவங்கலாம்.