கேளுங்க சொல்கிறோம்!
* கடவுள் இல்லை என்று மறுக்கும் அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது ஏன்?அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.கடவுளின் பெயர், வழிபாட்டுமுறை மத அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும் எல்லா மதங்களும் கூறும் உண்மை உலகைப் படைத்துக் காப்பது கடவுள் தான் என்பதே. கடவுள் மறுப்பு என்பது மற்ற மதங்களைப் பொறுத்தவரை தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. ஆனால் எல்லா மதங்களுக்கும் முன்னோடியான இந்து மதத்தில் சுதந்திரம் அதிகம். அதிலும் தமிழகத்தில் பலவிதங்களில் கடவுளை அவமானப்படுத்தும் அவலம் உள்ளது. தாங்கள் கேட்பது போல் யாரும் சுதந்திரம் கொடுக்கவில்லை. தட்டிக் கேட்க ஆளில்லை என்பதால் குதிக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டமும் இந்து மதத்திற்கு ஆதரவாக இல்லை.பிறர் அபகரித்த பரம்பரை சொத்தை மீண்டும் பெற பரிகாரம் கூறுங்கள்.அ.கிருஷ்ணசாமி திருப்பூர்.கார்த்தவீர்யார்ஜுனரை வழிபட்டு அவருக்குரிய மந்திரத்தை ஜபித்து வந்தால் இழந்த செல்வத்தை மீண்டும் அடையலாம். கார்த்தவீர்யார்ஜுணோ நாம ராஜா பாஹு ஸஹஸ்ரவான்!தஸ்ய ஸ்மரன மாத்னே ஹ்ருதம் நஷ்டம் சலப்யதே!!இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள், “ஆயிரம் கைகளை உடைய கார்த்தவீர்யாஜுனரே! அரசருக்கு அரசராக விளங்குபவரே! உம்மை மனதில் எண்ணி வழிபடும் எனக்கு ஏற்பட்ட பொருள் இழப்பை திருப்பித் தந்து அருள்புரிவீராக” என்று சொல்லி வழிபடலாம்.* நிலவைக்காட்டி குழந்தைக்கு சோறூட்டுவதின் சிறப்பு என்ன?ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.நிலவைப் பார்க்கும் யாருக்கும் மனதில் மகிழ்ச்சி பிறக்கும். குழந்தையும் அந்த மகிழ்ச்சியில் ஒழுங்காக உணவு உண்ணும். இதில் சிறப்பு என்னஎன்றால் மூலிகைகள், காய்கறிகளுக்கு சுவையும், சக்தியும் வழங்கும் ஆற்றல் நிலவிற்கு உள்ளது. இதன் குளிர்ச்சியான ஒளியில் குழந்தையின் உடல்நலன் காக்கப்படும். பவுர்ணமியன்று மனிதனின் மனோசக்தியும் அதிகரிக்கும். இதனால் தான் நிலவைக் காட்டி சோறூட்டும் வழக்கத்தை நம் முன்னோர் ஏற்படுத்தினர். இது விஞ்ஞான ரீதியான செயல்பாடாகும்.** எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு துன்பம் தராமல் வாழ முடியுமா?டி.வி.தங்கவேல், முருகம்பாளையம்.மூன்றையும் வரிசைப்படுத்திஇருப்பது நன்றாக உள்ளது. எண்ணம் நன்றாக இருந்தால் சொல் நன்றாக இருக்கும். எண்ணமும், சொல்லும் நல்லதாக இருந்தால், செயல்கள் பிறருக்கு துன்பமில்லாததாக அமையும். நாம் நல்லவராக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள சமூக சூழ்நிலை நம் மனதை மாற்றக் கூடும். அதிலிருந்து மீண்டு விட்டால் எந்த சூழலிலும் நல்லவராக வாழலாம். இதற்கு மனப்பயிற்சி அவசியம். புத்தி கூறும் நல்ல விஷயங்களை மனம் முதலில் கேட்க வேண்டும். இதை மனக்கட்டுப்பாடு, மனோபலம் என்று சொல்வர். இதை வழங்கும் ஆற்றல் கடவுளுக்கு மட்டுமே உள்ளது. அவரைச் சரணடைந்தால் யாருக்கும் துன்பம் தராமல் நல்லவனாக வாழலாம்