உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்கிறார்களே உண்மையா? கே.காந்தி, மதுரை. இரண்டு நபர்கள் ஒரே குற்றத்தை செய்யும் நிலையில், தண்டனையிலிருந்து தப்பித்தவனுக்கு அவனது ராசியில் இருந்து ஒன்பதாம் இடத்தில் குருவும், அகப்பட்டு தண்டனை பெறுபவனுக்கு அஷ்டமத்தில் (ராசியிலிருந்து எட்டாம் இடம்) சனியும் இருப்பதாகச் சொல்வர். பிறந்த ராசிக்கு ஒன்பதில் குரு இருந்தால் தைரியமாக தப்பு செய்யலாம் என்று இங்கே பொருள் கொள்ளத் தேவையில்லை. அப்படி செய்த குற்றத்திற்குரிய பலன், அதற்குரிய கிரகநிலை வரும் போது தண்டனை தந்து விடும் என்பதை மறந்து விடக்கூடாது.* காஞ்சிப் பெரியவரை வழிபட்டால் குடும்பக் கஷ்டம் நீங்குவதோடு சவுபாக்கியம் உண்டாகும் என்கிறார்களே! உண்மையா?எஸ்.வனிதா, கோயம்புத்தூர்.குடும்பக் கஷ்டம் உள்ளிட்ட துன்பம் நீங்க, காஞ்சிப்பெரியவர் போன்ற மகான்களை வழிபடுவது நல்லது. தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர்கள் மகான்கள். அவர்களை வழிபட்டால் குருவருள் உண்டாகும். குருவருள் இருந்தால் இறையருளும் நம்மை வந்தடையும். அதன்பின் வாழ்வில் சவுபாக்கியம் நிறைந்திருக்கும். காஞ்சிப் பெரியவருக்குரிய நட்சத்திரமான அனுஷத்தில் விரதமிருந்து அவரை வழிபடுவது சிறப்பான பலன் அளிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கொடுத்த வெற்றிலை பாக்கை பூஜைக்கு பயன் படுத்தலாமா?கே.நவியா,திருப்பாப்புலியூர்.சுவாமிக்கு நிவேதனம் செய்யாததாக இருந்தால் உபயோகிக்கலாம். * கோவிலில் உற்சவர் சிலைகளை பஞ்சலோகத்தில் செய்வது ஏன்?மல்லிகா அன்பழகன், சென்னை.மூலஸ்தானத்தில் கற்சிலை இருக்கவேண்டும் எனவும், அதனை பிரதிஷ்டை செய்யும் போது அசையாமல் இருத்தி வைக்க அஷ்டபந்தனம் என்னும் மருந்து சாத்தப்படவேண்டும் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. எனவே கற்சிலைகள் உற்சவ புறப்பாட்டிற்கு ஏற்புடையவையல்ல என்பது புரிகிறது. அதுபோல வீதி வலம் வரும் சுவாமி விக்ரகங்களை (உற்சவர்கள்) பஞ்சலோகத்தில் செய்ய வேண்டும் எனவும் அவை கூறுகின்றன. 'சலபேரம்' என சிற்ப சாஸ்திரம் உற்சவ விக்ரகங்களைக் குறிப்பிடுகிறது. இதற்கு 'அசையும் விக்ரகம்' என்று பொருள். ஆகமங்களில் சொல்லியுள்ளபடி உற்சவர் சிலைகள் பஞ்சலோகத்தில் செய்யப்படுகின்றன.சபரிமலையில் 18 படிகள் உள்ளன. 18ம் படி கருப்பன் இருக்கிறார். 18 ன் முக்கியத்துவம் என்ன?ஆர்.பாண்டுரங்கன், மைசூரு.சபரிமலையில் 18 படிகள் இருப்பது ஐயப்பனின் வரலாற்றுடன் தொடர்புடையது. ஆனால் 18ம் படி கருப்பசாமியின் தத்துவம் வேறுவிதமானது. எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது. 18 என்ற எண் வெற்றியைக் குறிக்கும். பூஜையறையில் சனிபகவானை வழிபடலாமா?என்.கணேசன், சென்னை.விநாயகர், முருகன், விஷ்ணு, சிவன், அம்பாள் போன்று சனீஸ்வரரையும் வழிபடலாம். பிற கிரகங்களின் தாக்கம் இருந்தால் அவர்களையும் வழிபடலாம். கோவிலுக்குச் சென்று வழிபட்டால் பலன் அதிகமாக இருக்கும்.