உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

மருத்துவர் ஆலோசனைப்படி, வீட்டுக்குள் செருப்பு அணிந்தால் தெய்வ குற்றம் ஏற்படுமா?எம்.எஸ்.ஹம்ஸா, சென்னை.தற்கால வீட்டுக் கட்டு மானத்தால் இந்த சூழ்நிலை உருவாகியது. சாதாரண தரைக்கும், டைல்ஸ் தரைக்கும் உள்ள வித்தியாசம் தான் இது. வழுவழுப்பில் நடக்கும் போது, நரம்புகள் சோர்வு அடைவதால் கால்வலி ஏற்படுகிறது. இதனால் செருப்பு அணிய வேண்டியதாகி விட்டது. தெய்வ குற்றம் என்பதை விட நம் மனம் ஏற்க மறுக்கும் விஷயம் இது. மருத்துவர் ஆலோசனைபடி நடக்க வேண்டியது தான்.கும்பாபிஷேகம் முடிந்ததும், 48 நாள் மண்டல பூஜை நடத்துவது ஏன்?எம்.ராமலிங்கம், கொங்கரப்பட்டு.கும்பாபிஷேகம் முதல் மூன்று பட்சம், சிறப்பு பூஜை செய்ய வேண்டும். ஒரு பட்சத்திற்கு 15 நாள் என்பதால் 45 நாள். ஆனால், 48 நாள் என்பது இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. கருவறைக்கு எழுந்தருளி இருக்கும் இறைவனின் தெய்வீக சக்தியை நிலைநிறுத்தவும், அஷ்ட பந்தன மருந்து இறுகவும் மண்டல பூஜை நடத்தப்படுகிறது. இக்காலத்தில் எண்ணெய், பால், பன்னீரில் மட்டும் அபிஷேகம் செய்யலாம். அஷ்டபந்தன மருந்து இறுகச் செய்வது அவசியம்.** அடிக்கடி சண்டையிடும் பெண்களை எப்படி திருத்தலாம்?டி.பத்மா, கோவை.சரியான புரிதல் இல்லாததால் சண்டை உண்டாகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி சுபாவம் உண்டு. மற்றவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தவறை பக்குவமாக எடுத்துச் சொன்னால் சண்டையிட அவசியம் இருக்காது. அர்த்தநாரீஸ்வரர், லட்சுமிநாராயணர் வழிபாடு குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.யாகத்தீயில் இட்ட நாணயத்தை எதற்குப் பயன்படுத்த வேண்டும்?பொன்.குமரவேல், ராஜபாளையம்.இதை ஒரு பிரசாதமாக பணப்பெட்டியில் அல்லது பூஜையறையில் வைத்தால் செல்வம் பெருகும்.* பணத்தை விட பக்திக்கு சக்தி அதிகம் என்பதை பிறருக்குப் புரிய வைப்பது எப்படி?க.விஜயராணி நெய்வேலிமனம் பக்குவப்பட்டால் தான் பக்தி உண்டாகும். நிம்மதி, மகிழ்ச்சி, உண்மை போன்ற நற்குணங்களை பணத்தால் பெற முடியாது. இறையருளால் தான் முடியும். சொல்லி புரிவதை விட காலம் புரிய வைக்கும்.* தீர்த்தங்களில் நீராடி முடித்ததும், ஆடையை நீரில் விடுவது சரிதானா?ரா. கலாராணி, சிவகாசி.இது தவறு. தூய்மை பாதிக்கும். நீராடிய பின் ஆடையை ஏழைக்கு கொடுப்பது சிறந்த பரிகாரம்.