கேளுங்க சொல்கிறோம்!
* காசி, ராமேஸ்வரத்துக்கு கணவன், மனைவி சேர்ந்தே செல்ல வேண்டுமா?ஜி.கண்ணம்மாள், திருச்சுழிபுண்ணிய தீர்த்தத்தில் நீராடும்போது மனைவியின் கையைப் பிடித்து நீராட வேண்டும். இல்லாவிட்டால் மகனின் கையைப் பிடிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் பசுக்கன்றின் வாலைப் பிடிக்க வேண்டும்.புதிய முயற்சியை சுபஹோரையில் துவங்கினால் வெற்றி எளிதா? சி.சசிகலா, சென்னைஒரு செயலைத் தொடங்க லக்னம், ஹோரை, கவுரி பஞ்சாங்கம் என விஷயங்கள் உள்ளன. ஏதாவது ஒன்றைப் பின்பற்றினால் போதும். வளர்ப்பு நாய் ஊளையிடுவது, பூனை அழுவது வீட்டிற்கு ஆகாதா?பி. ஜெயமுருகன், கடலாடிகாரணம் இல்லாமல் இப்படி செய்தால் வீட்டிற்கு ஆகாது. செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் அல்லது பூனை வளர்ப்பவரை அதிக நேரம் பிரிந்திருந்தாலோ அல்லது உணவு கொடுக்கா விட்டாலோ கூட இப்படி செய்யலாம். அதனால் தவறில்லை.* காஞ்சிப்பெரியவரை பிரதானமாக வைத்து வீட்டில் பூஜை செய்யலாமா?வி.அகிலாண்டேஸ்வரி, திருப்பூர்.படம் வைத்து வழிபடுவது நல்லது. காஞ்சிப் பெரியவரை குருவாக ஏற்று வழிபடுபவர்கள், அவர்களின் அறிவுரைகளை வாழ்வில் கடைபிடிப்பது மிக அவசியம்.கல்யாணத்தில் மொய் எழுதுவதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா?டி.ஜே.குபேந்திரன், பரமக்குடிதிருமணம் என்பது மனித வாழ்வின் தொடக்கம். தற்காலத்தில் படித்து, வேலை கிடைத்த பின் தான் திருமணம் செய்கின்றனர். அந்தக் காலத்தில் இளம் வயதில் திருமணம் நடந்ததால், புதுமண தம்பதியின் செலவுக்கு ஆசீர்வாதப் பணம் தந்தனர். தற்போது எதிர்பார்ப்புடன் மொய் என்ற பெயரில் தொடர்கிறது.மழைக்காக தனிப்பட்ட முறையில் பூஜை செய்ய என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?என்.பவானி, மதுரை"ஜ்ரும்பகாய வித்மஹேபாசஹஸ்தாய தீமஹி|தன்னோ வருண: ப்ரசோதயாத்|" என்ற மந்திரத்தை ஜெபிக்கலாம். சுந்தரர் பாடியுள்ள திருப்புங்கூர் தேவாரத்தில் "வையகமுற்று மாமழை" எனத் துவங்கும் பாடலைப் பாடி வழிபடலாம். ** இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ என்ன வழிபாடு செய்ய வேண்டும்?ஜே.பானு, கடலூர்.தினமும் கோயில் வழிபாட்டை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். நாயன்மார், ஆழ்வார்கள் போன்ற அருளாளர்களின் கதைகளைப் படியுங்கள். இவற்றைத் தொடர்ந்து செய்ய மனம் ஒருமுகப்படும். ஆசை, பாசத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிம்மதிக்குக் குறை இருக்காது.