உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

பிரம்மச்சாரிகள் திதி கொடுக்கலாமா?எல்.கஸ்தூரி, அம்பத்தூர்கொடுக்கலாம். திருமணம் செய்து, மனைவியுடன் சேர்ந்து செய்தால் இன்னும் நல்லது.வாசலில் கடவுள் உருவங்களை கோலமிடுகிறார்களே..... தவறு தானே!ஆர்.அபிதா, கூடுவாஞ்சேரிஆம்...காலில் மிதிபடும் விதத்தில் கோலமிடுவது பாவம்.*செவ்வாய், வெள்ளி அன்று உணவில் கீரை சேர்க்க கூடாதா?எஸ்.சந்தியா, மதுரைஅப்படி இல்லை. ஊருக்கு தகுந்தாற் போல் சில விஷயங்கள் மாறுபடுகிறது. வீட்டு பெரியவர்கள் சொல்வதை கேட்டு அனுசரித்து நடக்கவும்.* ஒரே நேரத்தில் வீட்டில் கணபதி, தன்வந்திரி, சுதர்சனஹோமம் நடத்தலாமா?டி.ஸ்ரீநிவாஸ சுதர்சனன், கோவைநடத்தலாம். அதற்கான விதிமுறை அறிந்தவர்களை கொண்டு, உரிய கலசங்கள் வைத்து மந்திரம் ஜபிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.ஒரு காலால் மற்றொரு காலைத் தேய்த்து கழுவக்கூடாதா.. ஏன்?த.அபி, மஞ்சக்குப்பம்.நகம் கடிப்பது, விளக்கு வைக்கும் நேரத்தில் தூங்குவது போல், இதுவும் செய்யக்கூடாத செயல். ஒரு காலின் அழுக்கு மற்ற காலுக்கு வந்து நோய் ஏற்பட வாய்ப்புண்டு.வாசற்படியில் உள்பக்கம் நின்று, பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்கிறார்களே...த.அபிராமி, சென்னைவாசல்படி என்பது லட்சுமியின் இருப்பிடம். உள்ளே நின்று கொடுத்தால் அந்த சக்தி குறையும். பிறகு பணப்புழக்கம் குறையும். ஒருவருக்கு கொடுக்கும் போது, அவரது கவுரவம் குறையாமல் இருக்கவும் இது வழக்கத்தில் உள்ளது.