உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

*விநாயகர், கிருஷ்ணர், என வழிபடும் தெய்வத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறேன். இது சரிதானா?ஆர்.பூமாதேவி, புதுச்சேரி.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் உள்ளது நம் இந்துமதம். பல பெயர்களில் வழிபடப்பட்டாலும் இறைவன் ஒருவனே. இங்கு நம்பிக்கை தான் முக்கியம். எனவே யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வணங்கலாம்.புத்திர தோஷம் நீங்க சஷ்டி விரதம் மேற்கொள்ளலாமா?சோமு, அருப்புக்கோட்டை.'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழி உண்டு. 'சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் கரு வளரும்' என்பதே இப்படி வழங்குகிறது. வளர்பிறை சஷ்டியன்று தம்பதியாக விரதமிருக்க, குழந்தைப்பேறு உண்டாகும். முருகன், சரவணன், வள்ளி, தேவசேனா என பெயரிடுவதாக நேர்ந்து கொள்வது சிறப்பு.ஸ்லோகம் ஏதும் சொல்லத் தெரியாதவர்கள் எப்படி வழிபடவேண்டும்?சு.ரஜினிப்ரியன், களம்பூர்.பக்தியோடு மனமுருகி, கடவுளின் திருநாமத்தை சொல்லி வழிபட்டால் போதும்.முச்சந்தி அல்லது தெருக்குத்து வீட்டுவாசலில் விநாயகரை வைத்தால் தோஷம் நீங்கிடுமா?ஏ.ஜெயா, மதுரை.சிலை வைத்தால் மட்டும் போதாது. பூஜையும் செய்ய வேண்டும்.காசி செல்லாதவர்கள் அந்தப் புண்ணிய பலனை பெற வாய்ப்பிருக்கிறதா?எஸ்.பத்மா, சென்னைகாசிக்கு நிகரானவை என்றும், காசிக்கு வீசம் அதிகம் என்றும் பல திருத்தலங்கள் உள்ளன. உதாரணமாக திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாயாவனம், திருவாஞ்சியம், அவினாசி, தென்காசி, காஞ்சிபுரம், மயிலாப்பூர் தலங்கள் காசிக்கு நிகரானவை. அந்தந்த பகுதியிலுள்ளவர்கள் மேற்படி கோயில்களுக்குச் சென்று வந்தால் காசிக்குச் சென்ற பலனை அடையலாம்.*சிலருக்கு சில கோயிலுக்குப் போனால் பிரச்னை உண்டாகிறதே.....ஆர்.எஸ்.மணீஷ், திருவொற்றியூர்.இது மனரீதியான பிரச்னை. குறிப்பிட்ட பதார்த்தத்தை சாப்பிட்டால் வயிற்றை வலிக்கும் என யாராவது கூறிவைப்பார்கள். அதை சாப்பிடுபவர் வயிற்றுவலியை நினைத்துக் கொண்டே சாப்பிட்டால், அந்த எண்ணமே வலிப்பது போல் தோன்றும். யார் என்ன கூறினாலும் அப்படியே நம்பிவிடாமல் யோசித்து செயல்பட்டால் எல்லாமே இன்பமயம் தான்.