உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

எஸ். ராமதிலகம், ராஜபாளையம். *படிப்பில் மந்தமான குழந்தைகளை திருத்த வழி கூறுங்கள்.வாரம் ஒருமுறை கோயிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். தன்னம்பிக்கை, நீதிக்கதைகளை சொல்லுங்கள். மற்ற குழந்தைகளுடன் எப்போதும் ஒப்பிடாதீர்கள். கே.ராகவன், பெங்களூரு *கட்டடப்பணி எளிதில் முடிய யாரை வழிபடலாம்?முருகப்பெருமான், அங்காரக பகவானுக்கு (செவ்வாய்) சிவப்புநிற பூக்களால் செவ்வாய்க்கிழமைகளில் அர்ச்சனை செய்யுங்கள். தினமும் காலை, மாலையில் கந்த சஷ்டி கவசம் கேளுங்கள். அ.ரவீந்திரன், கன்னியாகுமரி.*கிரிவலம் போவதற்கான காரணங்களைக் கூறவும்.மலைகளில் கடவுளின் அருள் நிறைந்திருக்கும். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற மலைக்கோயில்களில் இருந்து பவுர்ணமியன்று தெய்வீக சக்தி வெளிப்படும். அன்று மலையை வலம் வருவோருக்கு உடல்நலம், மன நிம்மதி கிடைக்கும். கந்தரூபி ராஜசேகர், திருவேற்காடு. *அம்பிகையின் அருளைப் பெற எளிய வழியுண்டா?வழியுண்டு. தினமும் மாலையில் வீட்டில் விளக்கேற்றி அபிராமி அந்தாதியை கேளுங்கள். ச.நாராயணன், திருநெல்வேலி *ஆத்திகர்கள் துன்பத்தில் துவள்கிறார்கள். நாத்திகர்களோ சந்தோஷமாக இருக்கிறார்களே...நீங்கள் நினைப்பது தவறு. முற்பிறவியில் செய்த பாவம், புண்ணியத்தின் விளைவே இப்போதைய வாழ்வு. ஆனால் கடவுள் அருளால் ஆத்திகர்கள் நிம்மதியாக வாழ்வர். வி. வாசுதேவன், கோவை. *கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளைக்கு குடைப்பிடிப்பது ஏன்?மணமக்களை கடவுளின்(பார்வதி - பரமேஸ்வரனாக அல்லது லட்சுமி - நாராயணராக) வடிவமாக கருத வேண்டும். அதனால் தான் மங்கலப் பொருளான குடையைப் பிடித்து ஊர்வலம் வருகிறோம். கே.விக்னேஷ், திருத்தணி.*அங்கப்பிரதட்சிணம் செய்யும் போது துணைக்கு ஆள் இருப்பது அவசியமா?கைகொடுத்து உதவுதல், களைந்த ஆடையை ஒழுங்குபடுத்துதல், தண்ணீர் கொடுத்தல் என உதவி செய்ய ஒரு நபராவது இருப்பது அவசியம். பி.லோகேஸ்வரி, புதுச்சேரி*கடவுள் உருவத்தை வாசலில் கோலமாக இடலாமா? கோலமாக இடக் கூடாது. கடவுளின் உருவத்தை நாம் காலால் மிதிப்பது பாவம் அல்லவா... பி.முனியசாமி, திண்டுக்கல்.புண்ணியதானம் என்றால் என்ன? தீட்டு கழிந்தபின் வீடு துாய்மை பெற புரோகிதர் மூலம் கலச பூஜை செய்வதை புண்யாக வாசனம் என்பர். தற்போது இது புண்ணிய தானமாக மாறி விட்டது.