உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

பி.மணி, மதுராந்தகம், செங்கல்பட்டு. *பல்லி சொல்லும், பல்லி விழும் பலன்கள் உண்மைதானா?உண்மை தான். உடம்பில் பல்லி விழும் இடம், பல்லி சத்தமிடும் திசையை பொறுத்து பலன்கள் அமையும்.த.ராமச்சந்திரன், தேவிபட்டினம், ராமநாதபுரம். *முக்தி பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன?முக்தி என்பது உயிர்கள் அடைய வேண்டிய உயர்ந்த நிலை. விருப்பு, வெறுப்பின்றி வாழ்தல், கடவுளைச் சரணடைதல், தியானம் செய்தல், நல்லவர்களுடன் பழகுதல் என நற்பண்புகள் கொண்டவர்கள் முக்தி பெறுவர்.பி.சுமதி, மைசூரு. *உழவாரப்பணி செய்தால் நன்மை கிடைக்குமா?கிடைக்கும். சிவனடியாரான திருநாவுக்கரசர் உழவாரப்பணி மூலம் சிவபெருமானை தரிசிக்கும் பேறு பெற்றார். இதில் ஈடுபடுவோருக்கு சிவனருள் கிடைக்கும். கவலைகள் தீரும். மனவலிமை அதிகரிக்கும். கே.சுபாஷினி, மயூர்விஹார், புதுடில்லி.*கோயில் வழிபாட்டின் போது அழுதால்தான் பலன் கிடைக்குமாஅப்படியில்லை. கோயிலில் தரிசனம் செய்தால் போதும். உங்களின் நிலையை கடவுள் நன்றாக அறிவார். எம்.சுந்தரி, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.*சித்தர் சமாதிகளை எப்போது வழிபடலாம்?அமாவாசை, பவுர்ணமி, அந்தந்த சித்தருக்குரிய நட்சத்திர நாட்களில் வழிபடுவது நல்லது. வி.வாசுதேவன், திருவல்லிக்கேணி, சென்னை.*சொர்க்கம், நரகம் விளக்கம் தருக.இறந்த பின்னும் உயிர்களுக்கு இன்ப, துன்ப அனுபவம் உண்டு. உயிர்கள் செய்த புண்ணியம், பாவத்தைப் பொறுத்து இது அமையும். ம.மாடசாமி, பெதப்பம்பட்டி, திருப்பூர்.*கடல் புனிதமாக கருதப்படுவது ஏன்?தேவர்கள் விரும்பி வாழும் இடமாகவும், மகாலட்சுமியின் பிறப்பிடமாகவும் இருப்பதால் கடல் புனிதமாக கருதப்படுகிறது.சு.லிங்கேஸ்வரி, திசையன்விளை, திருநெல்வேலி*சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டாமே....ஆம். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்பவை. கே.சந்திரா, வில்லுக்குறி, கன்னியாகுமரி. *உண்ணும் போது வாழை இலையை எப்படி இட வேண்டும்?இலையின் நுனி உண்பவருக்கு இடது பக்கம் இருக்க வேண்டும். எம்.விசாலாட்சி, கள்ளிக்குடி, மதுரை.*ஆவாஹனம் என்றால் என்ன?வரவழைத்தல் என்பது இதன் பொருள். யாகத்தின் போது கடவுளை வரவழைக்கச் சொல்லப்படும் மந்திரங்களை ஆவாஹனம் என்பர்.