கேளுங்க சொல்கிறோம்!
* சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன? சீ.அலமேலு, வளவனூர்'சரவணம்' என்றால் தர்ப்பை. 'பவ' என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் 'சரவணபவ' என பெயர் வந்தது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த தீப்பொறிகள், தர்ப்பைக் காட்டில் இருந்த பொய்கையை அடைந்தன. அந்தப் பொறிகள் ஆறு குழந்தைகள் ஆயின. பார்வதிதேவி. அவர்களை ஒரே குழந்தையாக்கினாள். ஆறு முகம், பன்னிரண்டு கையுடன் முருகன் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.** நீறில்லா நெற்றி பாழ் என்னும் அவ்வையின் வாக்கை மக்கள் உணர என்ன செய்ய வேண்டும்?எஸ்.கோவிந்தராஜன், அம்பத்தூர்திருநீறுக்கு 'ஐஸ்வர்யம்' என்று பெயர். இதை அணிந்தால் செல்வம் பெருகும். பாண்டிய மன்னருக்கு வெப்பு நோயைப் போக்க சம்பந்தர் திருநீறு கொடுத்து அருள்புரிந்தார். அது போல நாமும் திருநீறு பூசினால் நோய் உண்டாகாது. திருநீறு பூசியதும் சம்பந்தரின் திருநீற்றுப்பதிகத்தை படிப்பது விசேஷமான பலனைக்கொடுக்கும். * திருப்பதியை தரிசித்தால் வாழ்வில் திருப்பம் உண்டாகுமாமே....எஸ்.எல்.பிச்சைமுத்து, சிங்கப்பெருமாள்கோவில்'ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை! ஈரேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை' என்று பக்தர்கள் நாளும் அலைமோதும் திருப்பதியின் மகிமையை ஆழ்வார்கள் பாசுரங்களில் பாடியுள்ளனர். திருப்பதிக்குச் சென்றவர்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட்டு இருப்பது அனுபவ உண்மையே. இதனையே, 'திருப்பதி சென்றால் வாழ்வில் திருப்பம் நேரும்' என்று சொல்லி வைத்தனர். * பணப்பெட்டியை வீட்டில் எந்த மூலையில் எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்?கே.ஆர்.ஸ்ரீநிவாசன், வடவள்ளிவீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கில் பணப்பெட்டி வைக்கும் இடம் அமைய வேண்டும். வடக்கு நோக்கி வைத்தால் உத்தமம். அது குபேர திசை. கிழக்கு நோக்கியும் வைக்கலாம்.* பெண்கள் உச்சி வகிட்டில் குங்குமம் வைப்பதன் நோக்கம் என்ன?சே.அச்சுதன், ஜமீன் பல்லாவரம்திருமணமான சுமங்கலிகள் உச்சி வகிட்டில் குங்குமம் வைப்பது வழக்கம். உச்சித் திலகம் கருப்பை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் வைத்துக் கொள்கிறார்கள். * யோகா ஆன்மிகம் சார்ந்ததா அல்லது அறிவியல் சார்ந்ததா?கு.ஜெயலட்சுமி, மதுரையோகாசனம் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயம். அஷ்டாங்க யோகம் என்னும் எட்டு படிகளில் யோகாசனம் முக்கியமானது. நாளமில்லாச் சுரப்பிகளைத் தூண்டி உடலின் இயக்கத்தை இது சீர்படுத்துகிறது. ஆன்மிகம், அறிவியல் அடிப்படையில் அமைந்த இதற்கு இணையான உடற்பயிற்சி வேறு ஏதுமில்லை. மகரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்ட யோகப்பயிற்சியை பல நாடுகள் ஏற்றுள்ளன.