மனப்பாடப்பகுதி
UPDATED : ஆக 25, 2016 | ADDED : ஆக 25, 2016
கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்குஉருகிற்று என் உள்ளமும் நானுங் கிடந்தழிந் தெய்த்தொழிந்தேன்திருவொற்றியூரா திருவாலவாயா திருவாரூரா ஒருபற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சியேகம்பனே.பொருள்: திருவொற்றியூர், மதுரை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமானே! தாயின் கருவில் இருந்த காலத்தில் இருந்து உன் திருவடியையே என் மனம் சிந்தித்து உருகுகிறது. பிறவிக்கடலில் சிக்கித் தவிக்கும் எனக்கு உன்னை விட்டால் வேறு கதியில்லை. என் மீது இரக்கம் கொள்வாயாக.குறிப்பு: திருநாவுக்கரசர் தேவாரம்