மனப்பாடப்பகுதி
UPDATED : அக் 07, 2016 | ADDED : அக் 07, 2016
அடையாள நாண்மலர் அங்கையில் ஏடு மணிவடமும்உடையாளை நுண்ணிடை யொன்று மிலானை யுபநிடதப்படையாளை எவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுமே. பொருள்:தாமரை மலர் போல சிவந்த கையில் ஓலைச்சுவடியும், கழுத்தில் மணிமாலையும் அணிந்தவளே! மெல்லிடை பெற்றவளே! உபநிஷதத்தை தன்படைக்கலமாகக் கொண்டவளே! எல்லா உயிர்களையும் படைப்பவளே! நறுமணம் மிக்க வெள்ளைத் தாமரையில் வாழ்பவளே! உன்னையன்றி வேறு யாரையும் வணங்க மாட்டேன்.குறிப்பு:கம்பரின் சரஸ்வதி அந்தாதி பாடல்