உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

பூங்கழல் தொழுதும் பரவியும்புண்ணியா புனிதா உன் பொற்கழல்ஈங்கு இருக்கப் பெற்றேன் என்னகுறையுடையேன்ஓங்கு தெங்கிலை யார்கமுகு இளவாழைமாவொடு மாதுளம்பலதீங்கனி சிதறும் திருவாரூர் அம்மானே.பொருள்: தென்னை, பாக்கு, வாழை, மா, மாதுளை, பலா முதலான மரங்கள் கனிகளைச் சிந்தும் திருவாரூரில் வீற்றிருப்பவனே! புண்ணிய மூர்த்தியே! பரிசுத்தமானவனே! பொன்னான உனது திருவடிகளை வழிபடுவதால், என் மனதில் உன்னருள் நீங்காமல் நிறைந்திருக்கும் பேறு பெற்றேன். இதனால் எனக்கு குறையேதும் இல்லை.குறிப்பு: திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்