உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

 பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரைமறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும்உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே.பொருள்: பறக்கும் கிளிகளே! பாடும் நாகணவாய் என்னும் பெயர் கொண்ட பறவைகளே! எனக்கு தர்மத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் திருவாரூர் தியாகேசப் பெருமான் மீது ஆசை. அவரை மறக்க முடியாததால் உடல் மெலிந்து விட்டேன். என் கைவளையல்கள் கழன்று விழுகின்றன. அவரை எண்ணி தூக்கமின்றி தவிக்கும் என் நிலையை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.குறிப்பு: தன்னை சிவன் மீது காதல் கொண்ட பெண்ணாகக் கருதி சுந்தரர் பாடிய தேவாரப்பாடல்.