மனப்பாடப்பகுதி
UPDATED : டிச 30, 2016 | ADDED : டிச 30, 2016
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குகஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமேசூழ்க வையகமும் துயர் தீர்கவே.பொருள்: அந்தணர், வானுலக தேவர்கள், பசுக்கூட்டம் அனைவரும் வாழட்டும்! குளிர்ச்சி மிக்க மழை எங்கும் பொழியட்டும். அரசனும் நல்லாட்சி புரியட்டும். உலகிலுள்ள தீமையெல்லாம் அழிந்து போகட்டும். சிவபெருமானின் திருநாமம் எங்கும் பரவட்டும். துன்பம் நீங்கி உலகம் செழிக்கட்டும்.குறிப்பு: ஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்.