உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

காசினி இருளை நீங்கும் கதிரொளியாகி எங்கும்பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்வாசி ஏழுடைய தேர் மேல் மகாகிரி வலமாய் வந்ததேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றிபொருள்: உலகின் இருளைப் போக்குபவரே! கதிர்களால் எங்கும் ஒளி வீசுபவரே! உலக உயிர்களால் போற்றப்படுபவரே! உடல் நலத்தை அளிப்பவரே! ஏழு குதிரைகள் பூட்டிய தேரைக் கொண்டவரே! மேருமலையைச் சுற்றி வருபவரே! ஞானம் நிறைந்தவரே! சிவந்த நிறம் கொண்டவரே! என்னைக் காத்தருள வேண்டும்.குறிப்பு: நவக்கிரக துதியிலுள்ள சூரிய பாடல்