மனப்பாடப்பகுதி
UPDATED : பிப் 03, 2017 | ADDED : பிப் 03, 2017
கையால் உனைத் தொழச் சென்னியினால் உன் கழல் வணங்க மெய்யா அடிக்கடி வாக்கால் துதிக்க விதித்து மனம் நையா இயற்கை நல்கி இனி என்னை நழுவ விடேல் ஐயா உனக்கு அபயம் பழனாபுரி ஆண்டவனே பொருள்: பழநிமலை முருகப்பெருமானே! கை குவித்து உன்னை வணங்குகிறேன். தலையால் உன் திருவடிகளைச் சரணடைகிறேன். உன் திருப்பெயரையே இடைவிடாமல் ஜபிக்கிறேன். எனது மனம் மகிழும் வகையில் நல்ல நிலையை வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன். பழநியில் வீற்றிருக்கும் முருகப்பெருமானே! உன்னையே அடைக்கலம் அடைந்த என்னை கைவிடாமல் காக்க வேண்டும். குறிப்பு: சுப்பிரமணிய கவிராயர் பாடிய பாடல்