உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

ஆதியாதி யாதி நீயொரண்டமாதி ஆதலால்சோதியாத சோதி நீ அதுண்மையில் விளங்கினாய்வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்ஆதியாகி ஆயனாய மாயமென்ன மாயமே.(திருமழிசையாழ்வார் பாசுரம்)பொருள்: மூலத்திற்கு எல்லாம் மூலமான ஆதிமூலமே! அண்டங்களுக்கு எல்லாம் தொடக்கமாக விளங்குபவனே! ஒளி தரும் சூரிய, சந்திரருக்கும் ஒளி வழங்குபவனாக நீயே இருக்கிறாய். வேதமாகவும், வேள்வியாகவும் திகழ்பவனே! முதன்மைப் பொருளே! ஆயன் கிருஷ்ணனாக அவதரித்து, நீ செய்த மாயங்கள் எண்ணிலடங்காததாக உள்ளன.